சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சென்னையில் திருமாவளவன் கார் மீது வழக்கறிஞரின் இருசக்கர வாகனம் மோதிய விவகாரம். பார் கவுன்சில் துணைத்தலைவர் பாலு தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்களின் கூட்டமைப்பின் துணைத் தலைவர் இமயவரம்பன் சேலத்தில் பேட்டி.
தமிழ்நாடு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கீழமை நீதிமன்றங்களின் வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் துணைத் தலைவரும் சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க தலைவருமான இமயவரம்பன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு தொல் திருமாவளவன் காரில் சென்று கொண்டிருந்தபோது ராஜீவ் காந்தி என்ற வழக்கறிஞர் வேண்டும் என்று தகராறு செய்ததாக குறிப்பிட்ட வழக்கறிஞர் இமயவரம்பன் இது சம்பந்தமாக வழக்கறிஞர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டதாகவும் இது தொடர்பாக அனைவரும் அமர்ந்து பேசி வழக்கறிஞர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு விடக்கூடாது என்பது முடிவு செய்யப்பட்டது என்று தெரிவித்தார்.
ஆனால் இந்த விவகாரத்தில் பார் கவுன்சில் உறுப்பினரும் துணை தலைவருமான பாலு என்பவர் திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியதாகவும் அவருக்கு அவ்வாறு கூற எந்தவித உரிமையும் கிடையாது எனக் கூறிய வழக்கறிஞர் இமயவரம்பன் எனவே வழக்கறிஞர் பாலு தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என தெரிவித்தார். மேலும் வழக்கறிஞர் பாலு மீது மார்க் கவுன்சில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூட்டமைப்பின் துணைத் தலைவர் இமயவரம்பன் தெரிவித்தார்.
0 coment rios: