சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலம் அம்மாபேட்டை அன்னை தெரசா மனிதநேய அறக்கட்டளை பண மோசடி விவகாரம். முதலீடு செய்த பணம் கிடைக்கும் என நம்பி பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு வந்து ஏமாற்றமடைந்த பாதிக்கப்பட்ட பெண்கள்.
சேலம் அம்மாபேட்டையில் அன்னை தெரசா மனிதநேய அறக்கட்டளை என்ற பெயரில் பெண்களின் முன்னேற்றத்திற்காக தையல் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை அளித்து வந்ததோடு மட்டுமல்லாமல், அறக்கட்டளையில் பணம் முதலீடு செய்தால் அதனை இரட்டிப்பு செய்து தருவதாக பல்வேறு ஆசை வார்த்தை கூறி அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து சேலம் மாவட்டம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பெண்கள் கோடிக்கணக்கான ரூபாயை முதலீடு செய்து வந்துள்ளனர். தொடக்கத்தில் முதலீடு செய்தவர்களுக்கு உடனுக்குடன் பணம் வழங்கப்பட்டு வந்த நிலையில் பின்னிட்ட காலங்களில் பணம் திரும்ப வழங்குவதில் சுனக்கம் ஏற்பட்டதாகவும் ஒரு கட்டத்தில் பணம் கொடுப்பதையே நிறுத்தியதாகவும் கூறப்படுகிறது. சேலம் அம்மாபேட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை அடுத்து பாதிக்கப்பட்டவர்கள் அம்மாபேட்டை காவல் நிலையத்திலும் சேலம் பேர்லன்ஸ் பகுதியில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்திலும் தொடர்ச்சியான புகார்களை அளித்த வண்ணம் இருந்தனர். இந்த நிலையில் அறக்கட்டளையை நடத்தி வந்த விஜயபானு மற்றும் அவருடன் இருந்த பாதிரியார் செந்தில் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு தற்போது நிபந்தனை பிணையில் உள்ளனர். இந்த நிலையில் சேலம் அம்மாபேட்டை அன்னை தெரசா மனிதநேய அறக்கட்டளையில் பண முதலீடு செய்பவர்களுக்கு பணம் விநியோகிப்பதாக பணம் முதலீடு செய்தவர்களின் செல்போனுக்கு அன்பரசு சரவணன் என்ற பெயரில் ஆடியோ செய்தி வெளியான தகவலை எடுத்து நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சேலம் பேர்லன்ஸ் பகுதியில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் குவிந்ததால் பெரும் பரபரப்பு காணப்பட்டது.
மேலும் முதலீடு செய்தவர்களுக்கு பணம் கிடைப்பதாக கூறிய அந்த நபர்களும் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு வந்ததாகவும் ஒரு கட்டத்தில் அவர்களும் சென்று விட்டதாக பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மிகுந்த வேதனை அடைந்தனர். இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் நம்மிடையே கூறுகையில்,
2025 ஆம் ஆண்டு கடந்த ஜனவரி மாதம் முதல் தாங்கள் இந்த அறக்கட்டளையின் பண முதலீடு செய்ததாகவும் பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு பயிற்சிகளை அளித்து வந்ததோடு முதலீடு செய்தவர்களுக்கு பணம் கொடுக்காமல் பின் வந்த காலங்களில் முதலீடு செய்தவர்கள் பாதிக்கப்பட்டதாகவும், பணம் தருவதாக கூறிவிட்டு தற்பொழுது ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டை கொண்டு வரும் நிலையில் பணம் முதலீடு செய்த தாங்கள் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளதாகவும் பண்டிகை காலத்தில் பணம் பெறுவதற்காக இங்கு வந்து காத்திருந்தும் தங்களுக்கு பலன் கிடைக்கவில்லை என்றும் லட்சக்கணக்கான மக்கள் கோடிக்கணக்கில் பணம் முதலீடு செய்து விட்டு இதில் ஏராளமானோர் தங்களது உயிரை மாய்த்து கொண்டு விட்டதாகவும் இதே நிலை நீடித்தால் தாங்களும் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டிய ஒரு சூழல் ஏற்படும் என்று வேதனையுடன் தெரிவித்தனர்.
0 coment rios: