சேலம்.
S.K. சுரேஷ் பாபு.
சேலத்தில் அன்னை தெரசா மனிதநேய அறக்கட்டளை பண மோசடி வழக்கு. அம்மாபேட்டை காவல் நிலையத்தில் இந்திய குடியரசு கட்சியின் மாநில தலைவர் டாக்டர் வெங்கடேசன் மற்றும் பாதிரியார் செந்தில்குமார் நேரில் ஆஜர். விஜய பானு மற்றும் பாதிரியார் ஆகியோர்களின் சொத்துக்களை முடக்க வேண்டும். காவல் நிலையம் வளாகத்தில் இந்திய குடியரசு கட்சியின் தலைவர் டாக்டர் வெங்கடேசன் ஆவேசம்.
பெண்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடுவேன். அவர்களுக்கு பல்வேறு பயிற்சிகளை அளித்து அவர்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்துவேன் எனக் கூறி சேலத்தில் கால் பதித்த நிறுவனம் சேலம் அம்மாபேட்டையில் உள்ள புனித அன்னை தெரசா மனிதனே அறக்கட்டளை. இதில் உறுப்பினர்களாக கலந்து கொண்ட லட்சக்கணக்கான உறுப்பினர்கள் தாங்கள் சுய தொழிலில் பயன் அடைந்ததோடு மட்டுமல்லாமல் அவரவர் தங்களது அறக்கட்டளையில் பணத்தை முதலீடு செய்தால் இரட்டிப்பாக செய்து தருவேன் என்று ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியதன் பலன் சேலம் மாவட்டம் மட்டுமல்ல கோவை உலக நாடுகளிலும் ஒருவடைந்தது.
முதலீடு செய்தவர்கள் பணத்திற்கு ஆசைப்பட்டு ஆரம்பத்தில் செய்தவர்களுக்கு பலன் கிடைத்தது என்னமோ உண்மைதான். பின்னிட்ட காலத்தில் பணம் திரும்பி வழங்குவதையே நிறுத்தி விட்டார்கள் சம்மந்தப்பட்ட அறக்கட்டளையினர் காரணம், அறக்கட்டளையை நடத்தி வந்த விஜயபானு மற்றும் இவரது உதவியாளர் பாதிரியார் செந்தில்குமார். கொடுக்கல் வாங்கலில் இவர்கள் இருவருக்கும் இடையே பல்வேறு முரண்பாடுகள் இருந்த நிலையிலும், பாதிரியார் செந்தில்குமார் என்பவரின் பேச்சை நம்பி பண முதலீடு செய்தவர்கள் அதிகம் என்றால் அது மிகை அல்ல. இதனுடைய ஆரம்பத்தில் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் சமீப சற்று இழுப்பரி இருந்த நிலையில் தற்பொழுது பூதாகரமாக வெடித்துள்ளது என்பது நிதர்சனமான உண்மை.
இந்த நிலையில் ஏற்கனவே இந்த புகார் சம்பந்தமாக இன்று சேலம் அம்மாபேட்டை காவல் நிலையத்தில் ஏற்கனவே புகார் அளித்த இந்திய குடியரசு கட்சியின் தலைவர் டாக்டர் வெங்கடேசன் மற்றும் இந்த புகாரில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது பாதிரியார் செந்தில்குமார் ஆகியவரை இன்று நேரில் ஆஜர் ஆகி விளக்கம் அளிக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் இருவரும் இன்று அம்மாபேட்டை காவல் நிலையம் வந்திருந்தனர். விசாரணை முடிந்து செந்தில்குமார் எப்படி வெளியே சென்றார் என்பது செய்தித் துறையினருக்கு ஆச்சரியமாகவே உள்ளது.
ஆனாலும் இந்திய குடியரசு கட்சியின் மாநில தலைவர் டாக்டர் வெங்கடேசன் நம்முடைய கூறுகையில், இந்த பிரச்சனை தொடர்பாக சேலம் அம்மாபேட்டை அன்னை தெரசா அறக்கட்டளையின் நிறுவனர் விஜயபானு மற்றும் அவரது கூட்டாளி பாதிரியார் செந்தில்குமார் ஆகியோர் நாடகமாடிய வருகின்றனர் என்று குற்றம் சாட்டிய அவர், புகார் அளித்து பல மாதங்கள் ஆகியும் ஏன் தற்பொழுது வரை சம்பந்தப்பட்ட இருவரின் சொத்துக்களை உற்றார் உறவினர் உட்பட அனைவரின் சொத்துக்களையும் ஏன் தற்பொழுது வரை அம்மாபேட்டை காவல் துறையினரும் சேலம் பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினரும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பிய அவர் இருவரின் அனைத்து சொத்துக்களையும் ஜப்தி செய்து பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பணத்தை திரும்பி வழங்க வேண்டும் என்றும், கூட விஜய பானு அவர்கள் தன்னை அணுகிய போது செந்தில்குமார் என்ற பாதிரியார் அவருக்கு அதாவது விஜயபானுவிற்கு என்னுடைய இடத்தை வாடகைக்கு மட்டும்தான் கொடுத்தேனே தவிர இதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அவர் இந்த வழக்கில் இருந்து வெளியே முயற்சிப்பதாகவும், விஜய பானுவும் செந்தில் குமாரும் இனக்கமாகவே இணைந்து கொண்டு முதல் செய்த பொது மக்களை ஏமாற்றும் நோக்கில் பணத்தை திரும்ப வழங்காமல் ஏமாற்றி வருவதாக குற்றம் சாட்டிய டாக்டர் வெங்கடேசன், ஏற்கனவே இந்த பிரச்சனையை தொடர்பாக நான் மேற்கொண்ட போராட்டத்திற்கு அனுமதி சேதம் மாநகர காவல் ஆணையரிடம் கேட்டபோது இதே பாதிரியார் செந்தில்குமார் வேண்டுமென்றே ஒரு மனுவை கொடுத்து என்னுடைய போராட்டத்தை ரத்து செய்தார் என்றும் மடியில் கனம் இருந்தால்தான் வழியில் பயமிருக்கும் என்று கூறிய அவர் எதற்காக எனது போராட்டத்தை ரத்து செய்தார் என்று கேள்வியை எழுப்பியது உடன் இனிவரும் காலங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்கள் முதலீடு செய்த பணம் கிடைக்கும் வரை தனது போராட்டம் தொடர்ந்து தீரும் என்று உறுதிப்பட தருகிறார். இதன் காரணமாக சேலம் அம்மாபேட்டை காவல் நிலையத்தில் மிகுந்த பரபரப்பு காணப்பட்டது.
0 coment rios: