சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
நீதியின் பக்கம் நிற்போம் என்று கூறி சமத்துவ வழக்கறிஞர்களான சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் அறிவித்த போராட்டத்தை கைவிட்டு நீதிமன்ற பணிக்கு திரும்பினர்.
சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்தது இரு வழக்கறிஞர்களுக்கிடையேயான தகராறு. அடிபட்ட இராஜீவ் காந்தியும் வழக்கறிஞர் தான், அடித்ததாக சொல்லப்படுபவர்களும் வழக்கறிஞர்களே. ஆனால் ஒரு சிலர் வழக்கறிஞர் இராஜிவ் காந்திக்காக போராட்டம் என்ற பெயரில் நீதியை குழி தோன்டி புதைத்து வந்தனர். அதனை கண்டித்து சேலத்தில் இன்று ஆர்ப்பாட்டமும் மறியலும் மேற்கொள்ள சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் முடிவு செய்யப்பட்டு இருந்தது.
ஆனால் பார் கவுன்சிலின் அழைப்பை மதித்து சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு பணிக்கு செல்வதாக முடிவு செய்து இருந்தனர். அதன் அடிப்படையில் தமிழ்நாடு புதுச்சேரி கிழமை நீதிமன்ற வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் துணைத் தலைவரும், சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க தலைவருமான ஜெ.மு. இமயவரம்பன் தலைமையில் சங்கத்தின் செயலாளர் முருகன் மற்றும் பொருளாளர் கண்ணன் உள்ளிட்டோர் முன்னிலையில் நீதிமன்ற வளாகத்தில் திரண்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் ஏற்கனவே அறிவித்த போராட்டத்தை கைவிட்டு தங்களின் வழக்காடிகளுக்காக வழக்கமான பணிகளில் ஈடுபட இன்று நீதிமன்ற பணிகளுக்கு திரும்பினர்.
அப்போது தமிழ்நாடு புதுச்சேரி கிழமை நீதிமன்ற வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் துணைத் தலைவரும், சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவருமான ஜெ.மு. இமையவரம்பன் செய்தியாளரிடம் கூறுகையில், மேன்மை தாங்கிய பார்கவுன்சில் போராட்டத்தை கைவிட அனைத்து வவக்கறிஞர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தது. இச்சூழலில் வழக்கறிஞர் இராஜிவ் காந்திக்கு ஆதரவாக இன்று 17-10-25 ம் தேதி நீதிமன்ற புறக்கணிப்பிற்கு சேலத்தில் ஒரு சாரார் அழைப்பு விடுத்திருந்தனர்.
அதை ஒரு பொருட்டாக கருதாத சமூக நீதியை உயிர் மூச்சாக கருதும் நூற்று கணக்கான வழக்கறிஞர்கள் நீங்கள் சாதீயின் பக்கம் நின்றால் நாங்கள் நீதியின் பக்கம் நிற்போம் என்று நீதிமன்ற பணிக்கு திரும்பி உள்ளதாக தெரிவித்தார். இதன் காரணமாக சம்பந்தப்பட்ட குற்றவியல் வழக்கறிஞர்களின் வழக்காடுகள் என்று வழக்கின் நிலை என்ன ஆகுமோ என்று வேதனையில் இருந்த வழக்காடிகள் நீதிமன்ற பணிக்கு திரும்பியதால் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர் என்பது மட்டும் நிதர்சனமான உண்மை.
0 coment rios: