சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலம் பேளூர்பேருந்து நிலையத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பயன்பெறும் வகையில் கட்டப்படும் புதிய கடைகளுக்கு எதிர்ப்பு. ஆதிக்க சக்தியினர் மீது நடவடிக்கை எடுக்க சேலம் மாவட்ட ஆட்சியரிடம் பகுஜன் சமாஜ் கட்சியின் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் மனு.
பகுஜன் சமாஜ் கட்சியின் சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் செல்லம்மாள் தலைமையில் அதன் முக்கிய நிர்வாகிகள் சேலம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளிப்பதற்காக வந்திருந்தனர். அந்த மனுவில், சேலம் மாவட்டம் பேளூர் பேருந்து நிலையத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பலன் பெறும் வகையில் வணிகத்திற்கான கடைகள் கட்டப்பட்டது. கட்டி முடிக்கப்பட்டு தற்பொழுது வரை உரியவர்களுக்கு ஒப்படைக்காமல் காலம் தாழ்த்திய காரணத்தினால் கட்டிடங்கள் முழுவதும் பால் அடைந்து இடிந்து விடும் அபாயத்தையும் இருந்து வந்தது. தற்பொழுது அந்த பாழடைந்த கட்டிடங்களை இடித்து விட்டு புதிய கடைகள் கட்டுவதற்காக தாட்கோ வங்கியின் மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் சில ஆதிக்க சக்திகள் புதிதாக ஆதிதிராவிடர்களுக்கு என்று கடைகளை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழக முதல்வர் அவர்கள் சமதர்மம், சமூக நீதி, சனாதனம், அனைத்து சமூகமும் ஒன்று என்று பேசி வரும் நிலையில் தாட்கோ வங்கியின் மூலம் கடைகள் கட்டி தொழில் தொடங்குவதற்கு உண்டான சூழல் இங்கு இல்லை என்றும், இந்த நிலையை தமிழக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கிலும், உடனடியாக சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் இந்த கடைகளை கட்ட உரிய அனுமதி வழங்க வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் இந்த சமூக மக்கள் அதாவது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆகியோரை ஒன்று திரட்டி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்படும் என்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் கிழக்கு செல்லம்மாள் மனுவில் குறிப்பிட்டுள்ளார். அப்போது பகுஜன் சமாஜ் கட்சியின் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் பாலகிருஷ்ணன் பழனியம்மாள் மற்றும் பானு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
0 coment rios: