சேலம்.
S.K. சுரேஷ் பாபு.
சேலம் 9 வது கோட்டத்தில் வார்டு சபா சிறப்பு கூட்டம். இதில் பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது ஒரு மாத காலத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும். மாமன்ற உறுப்பினர் தெய்வலிங்கம் உறுதி.
தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் ஆகிய வார்டுகளில் சிறப்பு வார்டு சபா கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் உத்தரவின் பேரில், 60 கோட்டங்களை உள்ளடக்கிய சேலம் மாநகராட்சி முழுவதும் உட்பட அனைத்து பகுதிகளிலும் வார்டு சபா சிறப்பு கூட்டம் நடைபெற்றது. வரும் 29ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த சிறப்பு கூட்டத்தின் அடிப்படையில், சேலம் மாநகராட்சி 9 வது கோட்டத்திற்கு உட்பட்ட வாய்க்கால் பட்டறை தண்ணீர் டேங்க் பகுதியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு 9 வது கோட்ட மாமன்ற உறுப்பினரும், வழக்கறிஞரும் சிறந்த சமூக சேவகர்மான வழக்கறிஞர் தெய்வலிங்கம் தலைமையில் நடைபெற்றது.
மாநகராட்சி அதிகாரிகள் பலரும் முன்னிலை வகித்த இந்த சிறப்பு வார்டு சபா கூட்டத்தில் 9 வது கோட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் கூட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளை சார்ந்த பொதுமக்கள் தங்களின் தீர்க்கப்படாத கோரிக்கைகளை மாநகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் மாமன்ற உறுப்பினர் தெய்வலிங்கத்திடம் வழங்கினர். தனது கோட்டத்திற்கு உட்பட்ட மக்களுக்கு அவர்களின் தேவைகளை அறிந்து முன்கூட்டியே நிறைவேற்றி தந்த மாமன்ற உறுப்பினராக இருந்தாலுமே கூட, இந்த சிறப்பு கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகளிடம் வழங்கி துறை ரீதியாக அனுப்பப்பட்டு எதிர்வரும் ஒரு மாத காலத்திற்குள் இந்த சிறப்பு கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்களின் மீது நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்து தரப்படும் என்றும் உறுதி அளித்தார். இந்த சிறப்பு வார்டு சபா கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர். வரும் 29ஆம் தேதி வரை இதுபோன்று பகுதி சபா சிறப்பு கூட்டம் அனைத்து பகுதிகளிலும் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

0 coment rios: