சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலத்தில் ஸ்ரீ ராஜரிஷி ஆசிரமத்தில் நடைபெற்று சூரசம்ஹார திருவிழா. வானில் முருகப்பெருமான் தோன்றிய அற்புதக் காட்சி.
சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரத் திருவிழா அனைத்து முருகன் ஆலயங்களிலும் வெகு விமர்சையாக நடைபெற்றன. இதன் ஒரு பகுதியாக சேலத்தில் உள்ள அனைத்து முருகன் ஆலயங்களிலும் சம்ஹாரப் பெருவிழா வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டன. குறிப்பாக சேலத்தில் பிரசித்தி பெற்ற சேலம் பள்ளப்பட்டி ஸ்ரீ ராஜரிஷி ஆசிரமம் ஸ்ரீ பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலிலும் எம்பெருமான் முருகப்பெருமான் சூரனை வதம் செய்யும் வெகு விமர்சையாக நடைபெற்றன. காலை முதலே மூலவரான ஸ்ரீ பால தண்டாயுதபாணிக்கு சிறப்பு அபிஷேக மகா தேவாரதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து மாலை நான்கு மணி அளவில் திருக்கோவில் வளாகத்தில் எம்பெருமான் ஸ்ரீ பால தண்டாயுதபாணி எழுந்தருளி சூரனை வதம் செய்யும் சம்ஹாரப் பெருவிழா பக்தர்களின் சரண கோஷங்களுக்கு இடையே வெகு சிறப்பாக நடந்தேறியது. ஆசிரமத்தின் நிறுவனர் சிவனடியார் பாபு முன் நின்று நடத்திய இந்த சம்ஹார பெருவிழாவின் போது எதிர்பாராத விதமாக வானில் எம்பெருமான் முருகப்பெருமாள் தோன்றிய அற்புத நிகழ்வும் நடைபெற்றன. அப்பொழுது திருக்கோவில் வளாகத்தில் திரண்டு இருந்த ஏராளமான பக்தர்கள் முருகப்பெருமானின் சரண கோஷங்களை முழங்கியது விண்ணை பிளக்கும் வகையில் அமைந்திருந்தது.
விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகிகள் வாசுகி சுதன் வசியா சுப்ரமணி மற்றும் சிவகேசவ மூர்த்தி உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர்.

0 coment rios: