சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலம் பனமரத்துப்பட்டி பேரூராட்சியில் இரண்டாம் கட்ட உங்களுடன் ஸ்டாலின் முகாம். பட்டா மற்றும் மகளிர் உதவித்தொகை உள்ளிட்ட வருவாய் துறை தொடர்பான மனுக்களை அதிக ம் பெறப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தகவல்.
தமிழக முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களால் துவக்கி வைக்கப்பட்ட உங்களுடன் ஸ்டாலின் முகாம் தமிழக மக்களிடையே மிகுந்த வரவேற்பினை பெற்றுள்ளது. மாநில முழுவதும் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் இந்த திட்ட முகாமின் ஒரு பகுதியாக சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இரண்டாவது கட்டமாக உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. ஏற்கனவே முதற்கட்ட முகாம் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், இரண்டாவது கட்டமாக இன்று பனமரத்துப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட கோம்பை காடு சமுதாய கூடத்தில் நடைபெற்றது. பனமரத்துப்பட்டி பேரூராட்சியின் செயல் அலுவலர் ஜகந்னாதன் தலைமையில் நடைபெற்ற முகாமினை சேலம் கிழக்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் பாரப்பட்டி சுரேஷ் குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்று முகாமினை துவக்கி வைத்தார். பனமரத்துப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 8 முதல் 15 வது வார்டு வரை நடைபெற்ற இந்த சிறப்பு முகாமில் 13 அரசு துறை அதிகாரிகள் பங்கேற்று பொதுமக்கள் வழங்கிய பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை பெற்றனர்.
இரண்டாவது கட்டமாக நடைபெறும் இந்த சிறப்பு முகாமில் பட்டா மற்றும் மகளிர் உதவித்தொகை உள்ளிட்ட வருவாய்த்துறை தொடர்பான மனுக்களை அதிகம் பெறப்பட்டுள்ளதாகவும் ஏற்கனவே நிர்வகிக்கப்பட்ட காலகட்டத்தை காட்டிலும் தற்போது தீர்வு காணும் நீடிக்கப்பட்டுள்ளதாகவும் நீட்டிக்கப்பட்ட காலகட்டத்திற்குள் பெறப்பட்ட மனுக்கள் அனைத்திற்கும் தீர்வு மேற்கொள்ளப்பட்டு உரியவர்களுக்கு வழங்கப்படும் என்று பனமரத்துப்பட்டி பேரூர் கழக செயலாளர் ரவிக்குமார் நம்மிடைய தெரிவித்தார். இன்று காலை 9 மணிக்கு துவங்கிய முகாம் பிற்பகல் 3 மணி வரை நடைபெற்ற இந்த முகாமில் பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரி, பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் பிரதீப் ராதா நந்தன் மற்றும் மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

0 coment rios: