சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலம் வலசையூர் அரசு ஆண்கள் பள்ளி அணியினர் மாநில கோகோ போட்டிக்கு தேர்வு.
தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான கோகோ போட்டிகள் பல்வேறு பள்ளிகளில் நடைபெற்றன. இந்தப் போட்டியில் 14 மற்றும் 19 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான போட்டிகளில் சேலம் மாவட்டம் வலசையூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அணி முதலிடம் பெற்று மாநில போட்டிக்கு தகுதி பெற்றது. மாநில அளவிலான போட்டிகள் நவம்பர் மாதம் திருவண்ணாமலை மற்றும் ராணிப்பேட்டையில் நடைபெறுகிறது. இதே போல இந்த பள்ளியைச் சேர்ந்த கலை பிரிவு மாணவர் இந்திய பள்ளிகளின் விளையாட்டு குழுமம் சார்பாக நடைபெற்ற மாநில அளவிலான மல்யுத்த போட்டியில் கலந்து கொண்டு தமிழக அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து நவம்பர் மாதம் ஜோத்பூரில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளார். மாவட்ட கோகோ விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களையும் மல்யுத்த போட்டிக்காக தமிழக அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள வீரரையும் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயலேந்திரன், உடற்கல்வி ஆசிரியர்கள் அன்பன் டேனியல், யோகநாதன் மற்றும் ஆசிரிய பெருமக்கள் உள்ளிட்டோர் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தனர்.

0 coment rios: