சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலம் பள்ளப்பட்டி ஸ்ரீ ராஜரிஷி ஆசிரமம் ஸ்ரீ பழனி பால தண்டாயுதபாணி திருக்கோவிலில் சஷ்டி விழா. தமிழ் கடவுளின் பக்தி சரண கோஷங்கள் விண்ணை பிளக்க திரளானோர் பங்கேற்பு.
சேலத்தில் பிரசித்தி பெற்ற கந்தப்பெருமானின் திருக்கோவில்களில் சேலம் பள்ளப்பட்டி ஸ்ரீ ராஜரிஷி ஆசிரமம் ஸ்ரீ பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலும் ஒன்று. ஆறுமுகப்பெருமானின் அறுபடை வீடுகளிலும் தனிச்சிறப்பு இல்லை என்றாலுமே கூட தமிழகத்தில் ஒரே கல்லால் எட்டடி உயரத்திற்கு விஸ்வரூப கோலத்தில் வடிவமைக்கப்பட்ட எம் பெருமான் முருகன் என்ற தனிச்சிறப்பு கொண்ட இந்த திருக் கோவிலில் நடைபெறக்கூடிய முக்கிய திருவிழாக்களில் ஒன்றானது கந்த சஷ்டி திருவிழா. இந்த ஆண்டு கந்த சஷ்டி திருவிழா இன்று காலை பழனி ஸ்ரீ பால தண்டாயுதபாணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன், கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சேலம் பள்ளப்பட்டி மட்டுமன்றி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் புடை சூழ சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மேற்கொள்ளப்பட்டதை அடுத்து விஸ்வரூப சுப்பிரமணியருக்கு சிறப்பு அலங்காரங்கள் மேற்கொள்ளப்பட்டு மகாதீபாராதனைகள் நடைபெற்றன.
தொடர்ந்து திருக்கோவில் வளாகத்தில் சஷ்டி விழாவிற்கான கொடியேற்ற வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. திருக்கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்ட கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டதை அடுத்து ஸ்ரீ ராஜரிஷி ஆசிரமம் நிறுவனரும் சிவ முருகனடியாருமான பாபு சஷ்டி விழா கொடியேற்றத்தினை தொடங்கி வைத்து விழாவினை தொடங்கி வைத்தார். அப்போது திருக்கோவில் வளாகத்தில் திரண்டு இருந்த பக்தர்கள் செந்தில் ஆண்டவரின் சரண கோஷங்களை முழங்கியது விண்ணை பிளக்கும் வகையில் அமைந்திருந்தது என்பது மட்டும் நிதர்சனமான உண்மை. தொடர்ந்து சஷ்டி விழாவிற்காக விரதமிருந்த பக்தர்களுக்கு திருக்கோவிலில் பக்தர்களுக்கு கங்கணம் கட்டும் நிகழ்வும் விமர்சையாக நடைபெற்றது.
தொடர்ந்து ஆசிரமத்தில் மூலவருக்கு நாள்தோறும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் அன்று மாலை சிறப்பு பூஜைகளும் மேற்கொள்ளப்பட உள்ளதோடு, நாள்தோறும் பல்வேறு கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தோடு ஆன்மீக சொற்பொழிவு நிகழ்வுகளும் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் 27 ஆம் தேதி திருக்கோவில் விழாவத்தில் திருச்செந்தூரில் வீற்றிருந்து சூரனை எம்பெருமான் மயில் வாகனன் வதம் செய்தது போல இந்த திருக்கோவில் வழக்கத்திலும் சூரசம்கார நிகழ்வு நடைபெற உள்ளதாகவும் இதனை தொடர்ந்து 28ம் தேதி வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ பழனி பால தண்டாயுதபாணிக்கு திருக்கல்யாண உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற உள்ளதாக திருக்கோவிலில் சிவாச்சாரியார்கள் சுப்பிரமணி மற்றும் சிவ கேசவ மூர்த்தி ஆகியோர் தெரிவித்தனர். சஷ்டி விழா கொடியேற்று நிகழ்வுக்கான ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகிகள் வாசுகி சுதன் வசியா உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர்.

0 coment rios: