சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலம் அருகே அருந்ததியர் வீடுகளுக்குள் புகுந்து வன்முறை தாக்குதல் நடத்திய குண்டர்களை கைது செய்ய வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து காவல்துறையின் பாரபட்சமான நடவடிக்கையை கண்டித்து ஆதித்தமிழர் கட்சியினர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ஊனத்தூர் அருந்ததி சமூகத்தை சேர்ந்த ஜோதி என்பவரும் சிறுவாச்சூர் பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவரும் கடந்த 23ஆம் தேதி பேருந்தில் வரும் போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அன்று இரவு சிறுவாச்சூர் ஆதிதிராவிடர் சமூகத்தைச் சார்ந்த சக்திவேல் என்பவர் மகன் ஸ்ரீகாந்த் மற்றும் அவரது மனைவி ஆகியோரக தலைமையில் சுமார் 30க்கும் மேற்பட்டோர் ஊனத்தூர் ஆதிதிராவிடர் குடியிருப்புகளுக்குள் நுழைந்து இரும்பு பைப் மற்றும் உருட்டு கட்டை போன்ற பயங்கர ஆயுதங்களால் தாக்கியதில் அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த ஐயப்பன் முத்து சுசீலா மற்றும் பள்ளி குழந்தைகள் மூன்று பேர் உட்பட ஐந்து பேர் படுகாயம் அடைந்து ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக ஆதித்தமிழர் கட்சியின் சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் முல்லை பழனிச்சாமி தலைமையில், அம்பேத்கர் இந்திய குடியரசு கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் விஸ்வநாதன் என்பவருடன் பாதிக்கப்பட்டவர்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு புகார் மனு அளிப்பதற்காக வந்திருந்தனர். அந்த மனுவில் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை துணை கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தும் தலைவாசல் காவல் நிலைய அதிகாரிகள் வன்முறையில் ஈடுபட்டு கொலை வெறி தாக்குதல் நடத்திய நபர்களை கைது செய்யாமல் பாதிக்கப்பட்ட அருந்ததியர் சமூக மக்கள் மீது வழக்கு பதிவு செய்து ஒரு தலைவட்சமாக செயல்பட்டு வருவதாகவும் அதேபோல சம்பவம் நடந்து கிட்டத்தட்ட ஐந்து நாட்கள் ஆகியும் காவல்துறை சார்பில் பாதிக்கப்பட்ட பகுதியை நேரில் பார்வையிடவோ அல்லது விசாரிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளாமல் காலம் தாழ்த்தி வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் அந்த மனுவில் குற்றவாளிகளை தப்பிக்க செய்வது மட்டுமின்றி வழக்கை நீர்த்துப்போக செய்யும் வழிகளை செய்து தலைவாசல் காவல் துறை அதிகாரிகள் பாரபட்சமாக நடந்து கொள்வதாக குறிப்பிடப்பட்டுள்ள அந்த மனுவில், சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் இந்த பிரச்சனையில் தலையிட்டு வன்முறை தாக்குதலில் ஈடுபட்ட ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த சிறுவாச்சூர் சக்திவேல் ஸ்ரீகாந்த் ஸ்ரீகாந்தின் தாயார் உட்பட வன்முறை கும்பலை சார்ந்த 30 பேரையும் கைது செய்து அருந்ததியர் சமுதாய மக்களுக்கு பாதுகாப்பு வழங்கி உதவிடுமாறு மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து ஆதித்தமிழர் கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் முல்லை பழனிச்சாமி செய்தியாளர்களிடம் கூறுகையில் காவல்துறையும் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் தற்பொழுது மாவட்ட ஆட்சியரை அணுகி உள்ளதாகவும் ஒருவேளை மாவட்ட ஆட்சித் தலைவரும் நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் கட்சியின் தலைமையை ஒப்புதல் பெற்று காவல்துறைக்கு எதிராக பல கட்ட போராட்டங்களை முன்னெடுப்போம் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

0 coment rios: