சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலத்தில் இஸ்லாமியர்களை மட்டுமே குறிவைத்து நிகழ்த்தப்பட்ட சுமார் மூன்று கோடி ரூபாய் பண மோசடி. தலைமறைவாக உள்ள இஸ்லாமியர்களை கைது செய்து பணத்தை மீட்டு உரியவர்களுக்கு தரவேண்டி சேலம் மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு.
மாங்கனி மாநகரம் என்ற பெயர் பெற்ற சேலத்தில் சமீபமாக படம் மோசடி புகார்கள் தொடர்ச்சியாக அதிகரித்த வண்ணமே உள்ளன. கடந்த பல மாதங்களுக்கு முன்பு சேலம் அம்மாபேட்டையில் சுமார் 300 கோடி ரூபாய் அளவிற்கு பணம் மோசடி புகார் நடைபெற்று அந்த சுவடு இன்னும் அடங்காத சூழலில், தற்பொழுது மீண்டும் தலை தூக்கி உள்ளது பண மோசடி புகார்.
சேலத்தில் வசதி படைத்த இஸ்லாமிய குடும்பத்தை மட்டுமே குறிவைத்து சுமார் மூன்று கோடி ரூபாய் அளவிற்கு பணம் மோசடி செய்து தலைமறைவாக உள்ள அதே சமுதாயத்தை சேர்ந்த இஸ்லாமிய பிரமுகர்கள். மிகுந்த பரபரப்பு ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் சேலம் மாநகர காவல் ஆணையரிடம் இன்று புகார் மனு ஒன்றினை அளித்தனர். அந்த மனுவில், சேலம் கோரிமேடு பகுதியை சேர்ந்த முகமது இம்தியாஸ், இவரது மனைவி ஆயிஷா, இம்தியாசின் சகோதரர் தஸ்லீம், இம்தியாசின் தங்கை நஸ்ரின் பார்த்திமா, சேலம் கோரிமேட்டை சேர்ந்த யாசர் மற்றும் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த கப்பல் பாய் என்கின்ற ஜகாங்கீர் ஆகியோர் ஒன்றிணைந்து சேலம் கோரிமேடு பொன் நகரில் ஜாமியா இஹ்ஸானனுல் ஃகனீமீ என்ற பெயரில் மகளிர் அரபிக் கல்லூரி நடத்தி வந்ததாகவும், இதில் அனைத்து மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பெண்களுக்கு கல்வி பயிற்றுவித்து வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்ததாகவும், இதன் மூலம் அறிமுகமான கல்லூரியில் நிர்வாகிகள் கல்லூரியை நடத்தி வருவதோடு தாங்கள் பல்வேறு வியாபாரங்களில் பணத்தை முதலீடு செய்வதாகவும் தங்களிடம் பணம் செலுத்தினால் சில மாதங்களில் இரட்டிப்பாக தருகிறோம் என ஆசை வார்த்தைகளை கூறியதாக அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
இவர்களின் பேச்சை நம்பி இம்தியாஸ் மற்றும் கல்லூரி நிர்வாகிகள் கல்லூரியில் பயிலும் இஸ்லாமிய நன்கு வசதி படைத்த பிள்ளைகளின் பெற்றோர்களை அழைத்து பேசியதன் அடிப்படையில், சேலம் மாநகரின் பல்வேறு பகுதிகளை சார்ந்த சுமார் 25க்கும் அதிகமான இஸ்லாமியர்கள், தங்களது பிள்ளைகளின் திருமணம் உள்ளிட்ட இதர செலவுகளுக்காக வைத்திருந்த பெரிய தொகைகள், இவர்களின் ஆசை வார்த்தைகளை கூறி வைத்திருந்த நகைகளை விற்ற பணம், இது மட்டும் இல்லாமல் தங்களது சொகுசு வாகனங்களை விற்று வழங்கிய பணம் என சுமார் 2 கோடியே 85 லட்சம் ரூபாய் அளவிற்கு பணத்தை வசூலித்துள்ளனர்.
இதற்காக பெறப்பட்ட பணத்திற்கு கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் ஒப்பந்த பத்திரமும் வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்த அந்த மனதில் எது நாள் வரை திருப்பி தராமல் ஏமாற்றி வருவதுடன் தற்பொழுது கல்லூரியை காலி செய்துவிட்டு தலைமறை வாங்கி விட்டதாக ஒவ்வொருவரும் தங்களது மனுவில் தனித்தனியாக குறிப்பிட்டிருந்தனர். இதில் சேலம் ஜாதிர் அம்மாபாளையம் பகுதியைச் சேர்ந்த முகமது ஆஜும் என்பவர் அதிகப்படியாக 37 லட்சத்தில் 48 ஆயிரத்து 107 ரூபாய் வழங்கியுள்ளதாகவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனவே இஸ்லாமியர்களை குறி வைத்து இஸ்லாமியர்களே சுமார் மூன்று கோடி ரூபாய் பணம் மோசடி செய்து தலைமறைவாக உள்ளவர்களை கைது செய்து தங்களது பணத்தை மீட்டுத் தர வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
இது குறித்து பாதிக்கப்பட்டவர்களின் வழக்கறிஞர் இம்தியாஸ் நிம்மதியை கூறுகையில், தாங்கள் கல்லூரியில் நடத்தி வருவதுடன் பல்வேறு தொழில்களில் முதலீடு செய்து வருவதோடு, பழைய கப்பல்களை வாங்கி அதனை உடைத்து அதில் கிடைக்கும் பணத்தை தங்களுக்கு இரட்டிப்பாக திருப்பி வழங்குவதாகவும் தெரிவித்ததோடு தற்போது வரை முகமது இம்தியாஸ் உட்பட அவரது கூட்டாளிகள் யாரும் தொடர்பிலேயே இல்லை என்ற காரணத்தினால் முதற்கட்டமாக சேலம் மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளதாகவும், காவல்துறையினர் நடவடிக்கையை பொறுத்து நீதிமன்றத்தையும் அணுக உள்ளதாகவும் குறிப்பாக பண மோசடியில் ஈடுபட்ட நபர்களின் சொத்துக்களை முடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்க உள்ளதாக நம்மிடையே தெரிவித்தார்.

0 coment rios: