வியாழன், 30 அக்டோபர், 2025

சேலம் சோனா இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்க விழா

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

சேலம் சோனா இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி 
முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்க விழா 

சோனா கல்வி குழுமம், இயற்கை மருத்துவம் மற்றும் யோகா கல்வி ஆகியவற்றில் கவனம் செலுத்தும் விதமாக தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைகழகத்துடன் இணைந்து தமிழக அரசின் அங்கீகாரம் பெற்று BNYS இயற்கை மருத்துவம் மற்றும் யோகா அறிவியல் இளங்கலை படிப்பிற்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்க விழா கல்லூரியின் வளாகத்தில் நடைப்பெற்றது. சோனா இயற்கை மருத்துவக் கல்லூரியின் மேலாண்மை அறங்காவலர் திரு.தியாகு வள்ளியப்பா  முன்னிலையில் நடைபெற்ற விழாவிற்கு சோனா கல்விக் குழுமத்தின் தலைவர் வள்ளியப்பா தலைமை வகித்தார். கல்லூரியின் முதல்வர் டாக்டர். தர்மசம்வர்த்தினி விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்று பேசினார். முன்னதாக கல்லூரியின் முதலாமாண்டு மாணவ மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தனர். 
தலைமை விருந்தினராக சென்னை தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைகழகத்தின் துணைவேந்தர் டாக்டர் நாரயணசாமி கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். சிறப்பு விருந்தினராக சேலம் மற்றும் நாமக்கல் ஆயுஷ் சுகாதாரப் பிரிவுகளின் நிர்வாகத் தலைவர் புகழேந்தி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். சோனா இயற்கை மருத்துவக் கல்லூரியின் மேலாண்மை அறங்காவலர் தியாகுவள்ளியப்பா பேசுகையில் சோனா கல்விக் குழுமம் தொழில்நுட்பம், கல்வி, விளையாட்டு, ஜவுளி, கட்டுமானம் போன்றவற்றின் மூலம் சமுதாய வளர்ச்சி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் திறன்பட செயல்படுவது போல் இந்திய நாட்டின் பாரம்பரியமிக்க இயற்கை மருத்துவ முறையை ஒவ்வொரு குடிமகனும் பயனடைய இந்த சோனா இயற்கை மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது என்றும் இதன் மூலம் மருத்துவத் துறையில் இந்திய அளவில் ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்கும் என்றும் மேலும் சேலத்தில் 60 ஆண்டு பராம்பரிய மிக்க எங்களது கல்வி நிறுவனம் தற்போது இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவக் கல்லூரியை தொடங்கி 6 ஆண்டுகளாக சிறப்பாக பணியாற்றி வருகிறது. சமீபகாலமாக இயற்கை மருத்துவம் மற்றும் யோகா கல்வி படிப்புகளுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. எனவே இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு மருத்துவத்துறையில் மாணவர்கள் பல சாதனைகளை புரிய வேண்டும் என கேட்டுக்கொண்டார். இறுதியாக கல்லூரியின் டீன் வசந்திபாலமுருகன் நன்றி உரையாற்றினார். இந்த விழாவில் சோனா கல்வி குழுமத்தின் இயக்குனர் கார்த்திகேயன், முதல்வர்கள் செந்தில்குமார், காதர்நவாஷ், கவிதா, சி.எம்.ஒ சன்சு சந்தீப் பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் என பலர் பங்கேற்றனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: