சேலம்.
எஸ்.கே.சுரேஷ் பாபு.
18 அம்ச கோரிக்கைகளில் வலியுறுத்தி தமிழ்நாடு நில அளவை அலுவலர்களின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தின் ஒரு பகுதியாக, சேலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு கண்டன போராட்டம்.
தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிணைப்பு மாநில மையத்தின் சார்பில் கடந்த 1ம் தேதி மதுரையில் 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர் 18ஆம் தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டம் மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் வேலை நிறுத்த போராட்டத்தை துவங்கிய தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள், வேலை நிறுத்த போராட்டத்தில் ஒரு பகுதியாக களப்பணியாளர்களின் பணி சுமையை போக்கிட பணிகளை முறைப்படுத்த வேண்டும் தரம் இறக்கப்பட்ட குறுவட்ட அளவர் பதவிகளை மீளப் பெற்றிட வேண்டும் என்பன உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் மாவட்ட மையத்தின் சார்பில் சேலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கண்டன காத்திருப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு நில அளவைo அலுவலர்கள் ஒன்றிணைப்பின் சேலம் மாவட்ட தலைவர் சுதாகர் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் செல்லமுத்து, துணைச் செயலாளர் தமிழ்ச்செல்வன் மற்றும் பொருளாளர் இளங்கோ உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் அர்த்தனாரி மற்றும் மாவட்டத் தலைவர் அருள் பிரகாஷ் உள்ளிட்ட பல்வேறு அரசு துறை அலுவலர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு நில அளவை அதிகாரிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன உரையாற்றினார். தொடர்ந்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஒரு ஆதாரம் மற்றும் ஒப்பந்த முறை பணி நியமனப்பை முற்றிலும் கைவிட வேண்டும், காலியாக உள்ள நில அளவர் பணியிடங்களை நிரப்பிட வேண்டும், ஊதிய முரண்பாடுகளை கலைஞர் வேண்டும் மற்றும் வட்டம் குறுவட்டம் நகர சார் ஆய்வாளர் ஆய்வாளர் ஓடிட்ட புதிய பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என்பன உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சேலம் மாவட்ட மையத்தின்மாவட்ட தலைவர் சுதாகர் செய்தியாளிடம் கூறுகையில் நவம்பர் ஒன்றாம் தேதி மதுரையில் நடைபெற்றது.
மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடரும் வேலை நிறுத்த போராட்டத்தின் ஒரு பகுதியாக தற்பொழுது சேலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கண்டன காத்திருப்பு போராட்டம் நடைபெற்றுthuவருவதாகவும், காரணமாக தமிழகத்தில் பட்டா வழங்குதல் மற்றும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீதான உரிய நடவடிக்கை எடுப்பதில் மிகப்பெரிய பாதிப்பு எழுந்துள்ளதாக குறிப்பிட்ட அவர் தங்களது நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு பரிசீலித்து உடனடியாக மாநில நிர்வாகிகளை அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். தங்களது போராட்டத்திற்கு தமிழக அரசு செவி சாய்க்காத பட்சத்தில் மாநில மையத்தின் ஒப்புதலோடு அடுத்த கட்ட போராட்டங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார். இந்த போராட்டத்தில் பல்வேறு சங்கங்களை சார்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


0 coment rios: