எஸ் கே சுரேஷ் பாபு.
சேலத்தில் பள்ளி கல்லூரிகளில் நடைபெற்ற தமிழக கலாச்சார விழாவை பொய்ப்பிக்கும் விதமாக நிகழ்ந்த சேலம் முதியோர் இல்லத்தில் நடந்து தமிழக கலாச்சார விழா. பெற்ற பிள்ளைகள் மட்டும் குடும்பத்தாரை விரிந்த நிலையிலும் முதியோர்கள் உற்சாகம்.
சேலத்தில் போதிமரம் என்கின்ற அறக்கட்டளையின் சார்பில் தற்பொழுது அன்புச் சோலை என்கின்ற பெயரில் முதியோர் ஆதரவற்றோர் இல்லம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதனை இயக்கி வருபவர்கள் தனி குடும்பத்தார். இந்த அறக்கட்டளையின் தலைவராக ரமேஷ் குமார் என்பவரும், செயலாளராக ராஜராஜேஸ்வரி மற்றும் பொருளாளராக பிரேமா உள்ளிட்டோர் செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றனர். வழக்கமாக தமிழர்களின் கலாச்சார விழா பாரம்பரிய விழா என்பது பள்ளி கல்லூரிகளில் மட்டுமே நடைபெறுவது வழக்கம். இதனிடையே பெற்றோர்களை கவனிக்க தவறிய சில பிள்ளைகள் ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி அவர்களை பார்த்துக் கொள்வதற்கு நேரம் கூட கிடைக்காமல் தொலைக்காட்சி செல்போன் கணவனுடன் ஊர் சுற்றுவது என்ற கொள்கைகளை பின்பற்றிய பெண்களுக்கு ஆதரவாக செயல்படும் பிள்ளைகள் விடுபட்ட அதாவது பெற்றோர்களை கவனிக்காமல் வீட்டை விட்டு துரத்திய பெற்றோர்கள் ஏராளமான ஒரு உள்ளனர். அவர்களை அப்படியே விட்டுவிடட்டும் என்று பொண்டாட்டி பேச்சை கேட்டு விட்ட பிள்ளைகளும் உள்ளனர், அவர்கள் நன்றாக இருக்க வேண்டும் எங்களை பிரிந்தாலும் கூட என்பதன் அடிப்படையில் அவர்களாகவே பிள்ளைகளாகவே அனாதை ஆசிரமத்தில் சேர்த்துவிடும் அவலமும் தமிழகத்தில் தற்பொழுது நிகழ்ந்து கொண்டுதான் உள்ளது.
அதன் அடிப்படையில் சேலத்தில் போதி மரம் என்ற ஒரு ஆலமரத்தை உருவாக்கி தற்பொழுது ஆதரவற்ற முதியோர்களுக்கு ஆதரவளித்து வரும் இந்த அமைப்பில் கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர். யாரிடமும் உதவிகள் கேட்காமலும், யாரிடமும் யாசகத்தை எதிர்பார்க்காமலும், தங்களது சொந்த செலவில் தங்களை நாடிவரும் முதியோர்களை அரவணைத்து அவர்களுக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளும் செய்து வருவதோடு அவர்களுக்கான பொழுதுபோக்கு உணவு உளித்தவற்றை செய்து வரும் இந்த அறக்கட்டளையின் ஒரு பகுதியாக இன்று தமிழக கலாச்சார திருவிழா என்று சம்பந்தப்பட்ட அந்த முதியோர் இல்லத்தில் நடத்தப்பட்டது.
போதி மரம் அறக்கட்டளையின் தலைவர் ரமேஷ் குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் செயலாளர் ராஜ ராஜேஸ்வரி பொருளாளர் பிரேமா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இன்று நடைபெற்ற இந்த தமிழக கலாச்சார விழாவில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சேலம் மாவட்ட தலைவர் ராசி சகலவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விழாவினை துவக்கி வைத்து முதியோர்களிடம் பேசி மகிழ்ந்ததுடன் மட்டுமல்லாமல், வயது முதிர்ந்தவர்களை எப்படி பேணி பார்க்க வேண்டும் தனது தந்தையை எப்படி பார்த்துக் கொண்டேன் என்பதையும் அங்கு பதிவிட்டது பாதிக்கப்பட்டு அங்கு அடைக்கலம் நாடியே பெற்றோர்களை கண்கலங்க செய்தது. பாதிக்கப்பட்டவர்களின் அதாவது பெற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்டு இதுபோன்ற முதியோர் இல்லங்களில் அனுமதிக்கப்பட்ட முதியவர்களை மகிழ்விக்கும் விதமாக சம்பந்தப்பட்ட அன்புச்சோலை ஆதரவற்றோர் முதியோர் இல்லத்தில் தமிழக கலாச்சார விழா என்ற பெயரில் மூத்தோர்களின் பகல் நேர பராமரிப்பு மையத்தில் தமிழக கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையிலான பழமையான தமிழர்களின் நாட்டுப்புற நடனம் கிருஷ்ண பிருந்தாவனம் குழுவினர் வாயிலாக கோலாட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டன.
ஒரு கட்டத்தில் குழுவினர் மட்டுமே பங்கேற்ற அந்த நிகழ்வில் பாசத்திற்காக ஏங்கும் அந்த தாய்க்குலங்களில் எப்படி சொல்வது என்பது தெரியவில்லை அந்த சங்கலங்களையும் மீறி அவர்களுடன் இணைந்து கோலாட்டம் ஆடியது கண்களில் கண்ணீர் வரவழைப்பது ஆகவே இருந்து.


0 coment rios: