*ஈரோட்டில் தனியாக வசித்து வந்த மூதாட்டியின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு மூதாட்டி அணிந்திருந்த ஐந்து சவரன் தங்க நகையை திருடிச் சென்ற மர்ம நபரை தற்போது காவல்துறையினர் கோயம்புத்தூரில் வைத்து பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது*
ஈரோடு மாவட்டம் சூலை எல் வி ஆர் காலனி சேர்ந்தவர் கமலா இவரது கணவர் மணிகண்டன் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக உயிரிழந்த நிலையில் தற்போது வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்
இவரது மகன் மகேந்திர சேனாதிபதி பாண்டிச்சேரியில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார்
இந்த நிலையில் தினந்தோறும் தாயாருக்கு தொலைபேசி மூலம் பேசி வந்த மகன் மகேந்திர சேனாதிபதி சம்பவத்தன்று வெகு நேரம் தொலைபேசியில் தாயாரை அனைத்தும் தொலைபேசி எடுக்காவிட்டதால் சந்தேகம் அடைந்து அக்கம்பக்கத்தினரிடம் தகவல் கொடுத்து தாயார் சென்று பார்த்து சொல்லி உள்ளார்
இதனை தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் ஒன்று சேர்ந்து கமலா வாசித்து வந்த வீட்டிற்கு சென்று பார்த்த போது வீட்டின் முன் பகுதியில் கொடூரமான முறையில் கழுத்தறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கலந்துள்ளார்
பின்பு இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் மகன் மகேந்திர சேனாதிபதிக்கும், வீரப்பன் சத்திரம் காவல் நிலைய போலீசருக்கும் தகவல் கொடுத்துள்ளனர்
தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் கமலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து குற்றவாளியை 05 தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர்
இந்த நிலையில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த ராமர் என்பவர் அதே பகுதியில் தங்கியிருந்து மார்க்கெட்டிங் வேலை செய்து வந்ததாகவும், பல நாட்களாக மூதாட்டி கமலா வீட்டில் தனியாக வசித்து வந்ததை நோட்டமிட்டு வந்ததாக கூறப்படுகிறது
தனியாக வசித்து வருவதை தனக்கு சாதகமாக எடுத்துக் கொண்ட ராமர் கமலா வீட்டினுள் சென்று கமலாவின் கழுத்தை அறுத்து கொடூரமான முறையில் கொலை செய்து கமலா அணிந்திருந்த 5 சவர நகையை கொள்ளையடித்துக் கொண்டு கமலாவின் தொலைபேசியின் எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்
இது தொடர்ந்து போலீசார் நடத்திய தீவிர தேடுதல் பணியில் கமலாவின் தொலைபேசி எண் கடைசியாக சுவிட்ச் ஆப் செய்த லொகேஷனை வைத்து இந்த சம்பவத்திற்கு தொடர்புடையதாக கூறும் ராமர் என்ற நபரை போலீசார் கோயம்புத்தூரில் வைத்து மடக்கி பிடித்துள்ளனர்
உன் வீட்டில் தனியாக வசித்து வந்த மூதாட்டியை கொடூரமான முறையில் கொலை செய்து அணிந்திருந்த தங்க நகையை கொள்ளையடித்து சென்ற நபரை காவல்துறையினர் கோயம்புத்தூரில் வைத்து மடக்கி பிடித்த சம்பவம் தற்போது பெருவாம் பரபரப்பு ஏற்படுகிறது..



0 coment rios: