சேலம்.
S.K. சுரேஷ் பாபு.
தமிழ்நாடு பாஜக நெசவாளர்பிரிவு சார்பாக 100 நெசவாளர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கல்.....
சேலம் மாநகர் மாவட்ட நெசவாளர் பிரிவு செயற்குழு கூட்டம் சேலம் அன்னதானபட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நெசவாளர் பிரிவின் மாநிலத்தலைவர் அண்ணாதுரை தலைமையில நடைபெற்றது. இந்த கூட்டதில் ஏழை நெசவாளர்கள் 100 பேருக்கு பொங்கல்பரிசு வழங்கப்பட்டது.
சேலம் மாவட்டம் முழுவதும் பாஜக நெசவாளர் பிரிவு சார்பாக நவம்பர் ,டிசம்பர் மாதங்களில் நெசவாளர்களுக்கு 25 இலவச கண் சிகிச்சை முகாம்கள் நடத்தி 4 ஆயிரம் பேருக்கு கிட்ட பார்வை கண்ணாடிகளும் 1325 பேருக்கு இலவச பவர் கண்ணாடிகளும் வழங்கப்பட்டது. நெசவாளர்கள் மற்றும் ஜவுளித்துறைக்கு மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் புத்தகம் வெளியிடப்பட்டது. மத்திய அரசின் e Pachaan கார்டுகள் நெசவாளர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த் கார்டை கொண்டு நெசவாளர் குடும்பத்தில் உள்ள குழந்தைகள் ஜவுளி சம்மந்தமான படிப்பவர்களுக்கு ஆண்டுக்கு 2 லட்ச ரூபாய் மானியம் கிடைக்கும்.
நெசவாளர்களுக்கு மேலும் ஓய்வூதியம் கிடைக்கும் எண்ணற்ற பயன் உள்ள கார்டு
நெசவாளர் பிரிவு சார்பாக ,YouTube சேனல் துவக்கப்பட்டது. மேலும் முன்னாள் பாரதப்பிரதமர் பாரத ரத்னா திரு அட்டல் பிஹாரி வாஜ்பாஜ் அவர்களது வாழ்க்கை பயணம் புகைப்பட தொகுப்பு. கண்காட்சி திறந்து வைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாநில சுற்றுசூழல் தலைவர் கோபிநாத், நெசவாளர் பிரிவு மாநிலதுணைத்தலைவர்கள் செல்வராஜ், வஜ்ஜிரவேல், செயலாளர்கள் மணிகண்டன்,ஐயப்பன், மாவட்டதலைவர் தங்கமணி , காளிமுத்து உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.



0 coment rios: