சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலத்தில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா மாரத்தான் போட்டி. மாநில அளவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் பங்கேற்பு.
சேலம் வீரபாண்டி தெற்கு ஒன்றிய தி.மு.கசார்பில் துணை முதல் - அமைச்சர் உதயநிதி
ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி மாநிலஅளவிலான மாரத்தான் போட்டி இன்றுகாலை அரியனூரில் நடந்தது. 20 கிலோமீட்டர் ஆண்கள் பிரிவு, 8 கிலோமீட்டர்ஆண்கள், பெண்கள் பிரிவு, ஆறு கிலோமீட்டர் பெண்கள் பிரிவு, 5 கிலோ மீட்டர்
ஆண், பெண்கள், 2 கிலோ மீட்டர் ஆண்கள்,பெண்கள் என பல்வேறு பிரிவுகளாகமாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டிகளை டாக்டர் எழில்வேந்தன், வீரபாண்டி ஒன்றிய திமுக செயலாளர் வெண்ணிலா சேகர்,
தொகுதி பொறுப்பாளர் கிருபாகரன்,
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாவட்டதலைவர் ரத்தினவேல், இளைஞரணிசெயலாளர் மணிகண்டன், விளையாட்டு
பிரிவு ரமேஷ், உள்பட பலர் தொடங்கிவைத்தனர்.
இந்த மாரத்தான் போட்டியில்
வெற்றி பெற்றவர்களுக்கு சேலம்
கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளர்
எஸ்.ஆர்.சிவலிங்கம் எம்.பி, மேற்கு மாவட்டசெயலாளர் டி.எம். செல்வகணபதி எம்.பி
ஆகியோர் கலந்து கொண்டு பரிசு மற்றும்சான்றிதழ் வழங்கினர். இந்த மாரத்தான்போட்டிக்கான ஏற்பாடுகளை வீரபாண்டி
ஒன்றிய செயலாளர் வெண்ணிலாசேகர்
செய்திருந்தார். இந்த மாரத்தான்
போட்டியையொட்டி வழி நெடுங்கிலும்தண்ணீர் பாட்டில்கள், ஆம்புலன்ஸ்வசதி, போலீசார் பாதுகாப்பு வசதிகள்
செய்திருந்தனர். இதில் டாக்டர் தருண், ஏ.ஏஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



0 coment rios: