சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
மேயர் மற்றும் ஆணையர் ஆகியோரிடம் சரமாரியாக கேள்விகளை எழுப்பிய திமுக, அதிமுக மற்றும் விசிக மாமன்ற உறுப்பினர்கள். ஷானவாஸ் என்ற தனிநபரின் செயல்பாட்டிற்கு மாநகராட்சி நிர்வாகம் துணை போவதாக ஆறு மாமன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டியதால் பரபரப்பு.
சேலம் மாநகராட்சியின் மாதாந்திர இயல்பு கூட்டம் மேயர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. சேலம் மாநகராட்சி மாமன்ற கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு ஆணையாளர் டாக்டர் இளங்கோவன் மற்றும் துணை மேயர் திருமதி சாரதா தேவி மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி ஆணையர்கள் செயற்பொறியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த கூட்டத்தில் 60 கோட்ட மாமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டு அவரவர் கோட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பல்வேறு குறைகளையும் முன் வைத்தனர்.
இதில் பெரும்பாலான திமுக மாமன்ற உறுப்பினர்கள் தங்களது கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சரிவர திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படுவதில்லை என்றும், குறிப்பாக சேலம் மாநகராட்சியின் 59 வது கோட்டம் சேலம் மாநகராட்சியால் புறக்கணிக்கப்படுகிறதா என்று கேள்வியையும் திமுக மாமன்ற உறுப்பினர் முன்வைத்ததால் மாமன்ற இயல்பு கூட்டத்தில் திடீரென நிசப்தம். இவர்களின் குற்றச்சாட்டிற்கு மாநகர மேயரோ, ஆணையரோ மற்றும் உதவி ஆணையர்களோ பதிலளிக்காமல் இருந்தது சலசலப்பையும் ஏற்படுத்தியது. அப்போது சேலம் வ உ சி, பூ மார்க்கெட் வியாபாரிகள் உட்பட சாலையோர வியாபாரிகளிடம் சானவாஸ் என்ற தனிநபர் ஐந்து பேர் கொண்ட குழுவை அமைத்து சட்டவிரோதமாக அதிகப்படியான பண வசூலில் ஈடுபட்டு வருவதாகவும், சேலம் மாநகரம் உட்பட மாவட்டத்தை சேர்ந்த எந்த ஒரு வியாபாரிகளுக்கும் அவர் முன்னுரிமை அளிக்காமல் வெளியூர் வியாபாரிகளுக்கு அதிக பணம் பெற்றுக்கொண்டு இடங்களை ஒதுக்கி தருவதாக குற்றம் சாட்டினர். இந்த நபரின் செயலுக்கு சேலம் மாநகராட்சி அதிகாரிகள் உட்பட மாநகராட்சி நிர்வாகமே துணை நிற்பதாக பகிரங்கமாக மாமன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர். இந்த தனி நபர் மீது அம்மாபேட்டை மண்டல அலுவலகத்தில் அவருக்கு எதிராக ஏற்கனவே தீர்மானமும் நிறைவேற்றப்பட்டு உள்ளதாகவும், சேலம் மாநகராட்சி நிர்வாகம் சானவாஸ் என்பவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து காவல்துறையில் புகார் அளித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.
சம்பந்தப்பட்ட ஷானவாஸ் என்பவர் மீது மாமன்ற உறுப்பினர்கள் புகார் அளித்தால் மாநகராட்சி நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்கும் என்று மேயர் பதிலளித்தார். தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த கூட்டத்தில் ஆறு மாமன்ற உறுப்பினர்கள் கொண்டு வந்த இந்த பிரச்சனையை தனி தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்த மாமன்ற உறுப்பினர்கள், ஒரு கட்டத்தில் ஆறு மாமன்ற உறுப்பினர்கள் ஒரே நேரத்தில் பேசத் தொடங்கிய போது 44-வது கோட்ட மாமன்ற உறுப்பினர் இமையவரம்பன் குறுக்கிட்டு ஆறு மாமன்ற உறுப்பினர்களின் குற்றச்சாட்டுக்கு மாநகர மேயரோ அல்லது ஆணையரோ பதிலளிக்காமல் மௌனம் காப்பது ஏற்புடையதல்ல என்றும் ஆறு பேரின் குற்றச்சாட்டிற்கு மாநகராட்சி நிர்வாகம் என்ன பதில் அளிக்க போகிறது என்று கேள்வியையும் முன் வைத்தார். இதனால் சேலம் மாநகராட்சி இயல்புக்கூட்டத்தில் பெரும் பரபரப்பு காணப்பட்டது. இதன் எடுத்து பேசத் தொடங்கிய சேலம் மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் யாதவமூர்த்தி சேலம் மாநகராட்சியில் அனைத்து திட்டங்களிலும் முறைகேடு நடப்பதாகவும் ஒவ்வொரு மாமன்ற உறுப்பினர் பேசும்போதும் மாமன்ற உறுப்பினர் இமையவரம்மன் குறுக்கிட்டு பேசிய செயலை கண்டித்தும் அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கூட்டு அரங்கில் கோஷம் எழுப்பியவாறு வெளியேறினார்.



0 coment rios: