திங்கள், 29 டிசம்பர், 2025

தமிழக முழுவதும் பால் உற்பத்தியாளர்கள் தேசிய நெடுஞ்சாலைகளில் கரவை மாடுகளுடன் போராட்டத்தின் எதிரொலி. போராட்டத்தை தடுக்க தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் வேலுச்சாமி மற்றும் இளம் விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் சௌந்தரராஜன் உள்ளிட்ட மூன்று பேர் இன்று காலை அதிரடியாக கைது செய்யப்பட்டு பரமத்தியில் உள்ள சமுதாயக்கூடத்தில் அடைப்பு.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

தமிழக முழுவதும் பால் உற்பத்தியாளர்கள் தேசிய நெடுஞ்சாலைகளில் கரவை மாடுகளுடன் போராட்டத்தின் எதிரொலி. போராட்டத்தை தடுக்க தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் வேலுச்சாமி மற்றும் இளம் விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் சௌந்தரராஜன் உள்ளிட்ட  மூன்று பேர் இன்று காலை அதிரடியாக கைது செய்யப்பட்டு பரமத்தியில் உள்ள சமுதாயக்கூடத்தில் அடைப்பு. 

தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் பால் பண்ணை மூலம் தமிழக விவசாயிகளிடமிருந்து பெறப்படும் பசு மற்றும் எருமை பாலிற்கு கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசு தற்போது வரை செவி சாய்க்காததால் 29ஆம் தேதி ஆகிய இன்று தமிழகத்தில் பால் உற்பத்தி நிறுத்த போராட்டம் நடத்துவதுடன், தமிழக முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் கறவை மாடுகளுடன் பால் உற்பத்தியாளர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதாக ஏற்கனவே அறிவித்து இருந்தது .
உழவர் பெருந்தகை  நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி ஏற்கனவே இன்று தமிழகம் தழுவிய அளவில் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்து இருந்த நிலையில் இன்று காலை அதிரடியாக அவர் இல்லத்தில் வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்து குறிப்பில், தமிழ்நாடு அரசு, ஆவின் கூட்டுறவு ஒன்றியம் மூலம், விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்யும் பசும் பால் மற்றும் எருமைப் பாலின் விலையை தற்போதைய கொள்முதல் விலையில் இருந்து லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 15 ரூபாய் உயர்த்தி அறிவிக்க கோரி உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் பலமுறை தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை வைத்தும் திமுக அரசு செவி சாய்க்காததால் தமிழகம் முழுவதும் உள்ள விவசாய சங்க அமைப்புகள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் அணைவரும் ஒன்றிணைந்து உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் கூட்டமைப்பு சார்பில் இன்று 29.12.2025 காலை 10 மணிக்கு தமிழகம் முழுவதும் கறவை மாடுகளுடன் தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்,
உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் எனது தலைமையில் நாமக்கல் மாவட்டம்  நாமக்கல் வட்டம் கோனூர் ஊராட்சி கந்தம்பாளையம் பேருந்து நிறுத்தம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் கறவை மாடுகளுடன் விவசாயிகள் மறியல் போராட்டம் நடைபெற இருந்தது இந்த போராட்டத்தை முரிவுயடிக்கும் விதமாக பரமத்தி காவல் நிலைய ஆய்வாளர் அவர்கள் தலைமையில் காவலர்களுடன் இன்று காலை  உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் R.வேலுசாமி அவர்களைவும் மற்றும் இளம் விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜெ.சௌந்தரராஜன் அவர்கள் உட்பட மேலும் 3 பேரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து முன்கூட்டியே கைது  செய்து பரமத்தி பேரூராட்சி சமுதாய கூடத்தில் தங்கவைத்துள்ளனர்.தமிழக விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையான பால் போராட்டம் நடத்துவதை திமுக அரசு முறியடிக்கும் விதமாக சதி செய்துள்ளது. பால் கொள்முதல் விலையை தமிழ்நாடு அரசு உடனடியாக உயர்த்தி அறிவிக்கா விட்டால் மீண்டும் அடுத்தகட்ட போராட்டம் 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் அன்று சென்னை கோட்டை தலைமைச் செயலகத்தை முற்றுகை இடும் போராட்டம் தமிழக விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் அனைவரும் மிகப்பெரிய அளவில் ஒன்றிணைந்து நடத்தப்படும் என உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி எச்சரிக்கையை விடுத்துள்ளார்.


শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: