சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலத்தில் நேற்று ராமதாஸ் கண்ணீர் விட்டு அழுது நாடகம். சேலத்தில் பாமக மாநில ஒருங்கிணைப்பாளர் கார்த்தி காட்டம்.
சேலத்தில் தேர்தலுக்காக ராமதாஸ் கண்ணீர் விட்டு நாடகம் நடத்தியுள்ளார் என பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கார்த்தி செய்தியாளர்களும் தெரிவித்தார். பாமக தலைவர் அன்புமணி தரப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் கார்த்தி சேலத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். பாட்டாளி மக்கள் கட்சி என்ற பெயரில் செயற்குழு மற்றும் பொதுக்குழு நாடகத்தை சேலத்தில் நடத்தியுள்ளார்கள் என்றும் அது பாமக பொதுக்குழு அல்ல கட்சியின் விதிகளின்படி பொதுக்குழுவை கூட்டும் அதிகாரம் பாமக தலைவர் அன்புமணிக்கும் பொதுச் செயலாளர் வடிவேல் இராவணனிடம் உள்ளது என்றும் பாமகவே 1989இல் உருவாக்கிய போது போடப்பட்ட விதி அதுதான் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார். தலைவர் அன்புமணி நடத்திய பொதுக்குழு தான் உண்மையானது அதனை தேர்தல் ஆணையத்திற்கு ஏற்கனவே தெரிவித்து விட்டோம் என்றும் தற்பொழுது தேர்தலில் வாக்கு சதவிகிதம் குறைந்து அங்கீகாரத்தை இழந்து இருந்தாலும் தலைவர் அன்புமணி அதனை வரும் தேர்தலில் மீட்டு எடுப்பார் என்றும் குறிப்பிட்ட அவர் 45 ஆண்டுகளாக பாமகவில் இருப்பதாக ஜிகே மணி பொய் கூறுவதாகவும் அவர் 1984 இல் காங்கிரஸ் கட்சியில் இருந்ததாகவும் ஆதாரத்துடன் வெளியிட்ட அவர் கடந்த 1989 ஆம் ஆண்டில் அவரை கார்த்தி ஆகிய தானும் சின்னப்பன் என்பவரும் தான் அவரை கட்சிக்குள் கொண்டு வந்து மாவட்ட தொண்டர் படை தலைவராக பொறுப்பு வழங்கியதாக தெரிவித்த அவர், கடந்த 2022 ஆம் ஆண்டு கட்சி தலைவர் பதவியை அன்புமணிக்கு விட்டுக் கொடுக்காமல் ஜிகே மணி அவர்கள் தட்டி கழித்தார் என்றும் அப்போது தான் ஜோசியம் பார்த்து உள்ளதாகவும் மூன்று மாதம் கழித்து தான் தலைவர் பதவியை விட்டு தர முடியும் என ராமதாஸிடம் ஜிகே மணி தெரிவித்ததாக குறிப்பிட்டார்.
மேலும் அவருக்கு அன்புமணியை பற்றி பேச எந்த தகுதியும் கிடையாது என்று குற்றம் சாட்டியதுடன் சேலத்தில் பொதுக்குழு என நடத்திய நாடகத்தில் ராமதாஸ் அழுது நாடகம் ஆடியது வேடிக்கையானது என்றும் அவரது கண்ணீரை துடைப்பது போல கர்ச்சி எடுத்துக்கொண்டு பக்கத்தில் இருந்து வரும் நடித்துள்ளனர் என்றும் தேர்தல் நேரத்தில் இப்படி நாடகம் அரங்கேற்றி உள்ளதாக பகிரங்கமாக குற்றம் சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர் பாமகவை இரண்டாக உடைக்க உடன் இருக்கும் ஜிகே மணி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அருள் ஆகியோர் செயல்படுவதாக குற்றம் சாட்டியதுடன், கூட்டணி பேச்சு குறித்து வேட்பாளர் தேர்வு ஏ, பி விண்ணப்பத்தில் கையெழுத்து ஆகியவற்றை தலைவர் அன்புமணி தான் இட வேண்டும் இவ்வாறு பேசினார். கூட்டத்தைக் கூட்டி காட்டட்டுமா என சவால் என்று மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் கூறுகையில் சேலத்தில் நடந்த பொதுக்குழுவில் 95 சதவீத பேர் தங்களுடன் அதாவது அன்பு மணியுடன் இருப்பதாகவும் எனக் கூறியுள்ளார். அப்படி சேலத்தில் நடந்த கூட்டம் கூடவில்லை என்றும் தான் இரண்டு முறை சுற்றி பார்த்ததாகவும் கூட்டமே இல்லாமல் காலியாக இருந்ததாகவும் இருப்பதாக 95 சதவிகிதம் இருப்பதாக கூறினால் இதே மண்டபத்தில் தான் கூட்டத்தை கூட்டி காட்டுகிறேன் என்றும் சதாசிவம் சவால் விடுத்தார். வாங்கிய பணத்திற்காகவும் வெறுப்பு அரசியல் காட்டுவதற்காகவும் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களும் இந்தக் கூட்டத்தை நடத்தியுள்ளதாக குற்றம் சாட்டியதுடன் இவர்களுக்கு சிங்கப்பூரில் இருந்து 110 கோடி ரூபாய் பணம் வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இறுதியாக பசுமை தாயகம் என்ற அமைப்பு அரசு சார்பற்ற ஒரு அமைப்பு என்றும் எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் துணை அமைப்பும் கிடையாது என்று திட்டவட்டமாக தெரிவித்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கார்த்தி, பாமக நிறுவனரான அவர் எப்படி பசுமை தாயகம் அமைப்பின் தலைவராக உள்ள சௌமியா அன்புமணி அவர்களை நீக்கிவிட்டு தனது மகளான ஸ்ரீகாந்தி என்பவரை நியமிக்க முடியும் என்று கேள்வி எழுப்பிய அவர், கட்சிக்கு அப்பாற்பட்ட அமைப்பின் தலைவரை நீக்க எந்த விதத்திலும் பாமக நிறுவனர் ராமதாஸிற்கு அதிகாரம் கிடையாது என்றும் அவராக பதவி விலக வேண்டும் மீண்டும் அந்த அமைப்பில் உள்ள உறுப்பினர்கள் அடுத்த தலைவரை தேர்ந்தெடுப்பார்கள் என்று குறிப்பிட்ட அவர், ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகாரம் பெற்ற பசுமை தாயகம் அமைப்பின் தலைவரை நீக்க ஒரு கட்சியின் நிறுவனரால் தீர்மானிக்க முடியாது என்றும், பசுமைத்தாயகம் அமைப்பின் தலைவராக தற்பொழுதும் சௌமியா அன்புமணி அவர்கள் தான் நீடித்துக் கொண்டிருக்கிறார் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார். இறுதியாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இடம்தான் 95 சதவீதம் பேர் உள்ளனர் என்பதை விரைவில் நிரூபிப்போம் என்றும் உறுதிபட முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளருமான கார்த்தி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.



0 coment rios: