சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலத்தில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக கல்லூரி மாணவ-மாணவிகள் மகிழ்ச்சி கொண்டாட்டம். திரைப்பட பாடல்களுக்கு உற்ச்சாக நடனம். ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் ஒரே நேரத்தில் செல்போன் டார்ச் லைட்டுகளை இயக்கி உற்சாகம்.
மேற்கத்திய கலாச்சாரத்தினை பின்பற்றி நமது நாட்டிலும் பின்பற்றி கோலாகலமாக கொண்டாடும் பழக்கம் நகர்புற மக்கள் மட்டுமல்லாது கிராமப்புற மக்களிடமும் காணப்படுகிறது. புத்தாண்டினை உற்சாகத்தோடு மகிழ்ச்சியாக வரவேற்றால் அந்த வருடம் முழுவதும் மகிழ்ச்சி பெருகும் எனபது நம்பிக்கை. புத்தாண்டிற்கு முதல் நாள் நள்ளிரவு வரை காத்திருந்து புதுவருடம் தொடங்கும்போது, ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டும், இனிப்புகளை வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியினை வெளிப்படுத்துவது வழக்கம்.
அந்த வகையில் புத்தாண்டை வரவேற்க உலகமே தயாராகி கொண்டிருக்கும் நிலையில், சேலம் மாசிநாயக்கன்பட்டி பகுதிகளில் உள்ள வைசியா கல்லூரி சார்பில் புத்தாண்டை வரவேற்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி சம்மந்தப்பட்ட கல்லூரியின் மகாலட்சுமி அம்மாள் அரங்கில் நடைபெற்ற இந்த புத்தாண்டை வரவேற்கும் நிகழ்ச்சிக்கு கல்லூரியின் தலைவர் நரசுஸ் சிவானந்தம் தலைமை வகித்தார். கல்லூரியின் முதல்வர் டாக்டர் வெங்கடேஷ் உட்பட கல்லூரியின் நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் துறைத்தலைவர்கள் உள்ளிடோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் கல்லூரியின் தலைவரும் முதல்வரும் மாணவ மாணவிகளுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து 2026 புத்தாண்டினை வரவேற்கும் விதமாக மாணவ-மாணவிகள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். தொடர்ந்து அன்றைய தினத்தை உற்ச்சாகமாக கொண்டாடும் விதமாக பாரம்பரிய நடனமான பரத நாட்டியத்தில் தொடங்கி மேற்கத்திய, கிராமப்புற மற்றும் தங்களுக்கு பிடித்தமான பாடல்களுக்கு உற்ச்சாகமாக நடனமாடி மகிழ்ந்தனர். காலை முதல் மாலை வரை நடைபெற்ற இந்த கலை நிகழ்ச்சி வழக்கமான உற்சாகத்துடன் நடைபெற்றது. புத்தாண்டை வரவேற்கும் விழாவில் முத்தாய்ப்பாக ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் பங்கேற்று இருந்த அரங்கம் முழுவதும் அவர்களின் செல்போன் டார்ச் லைட்டை இயக்கி புத்தாண்டை வரவேற்றது அனைவரையும் கவரும் விதமாக அமைந்திருந்தது.
இந்த நிகழ்ச்சியில் கல்லூரியின் ஆசிரிய பெருமக்கள், அனைத்து பணியாளர்கள் மற்றும் மாணவ மாணவிகள் என ஏராளமானோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.



0 coment rios: