சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
தமிழக கட்டுமான தொழிலாளர் நல வாரியத்துடன் ஒலிபெருக்கி மின் அலங்காரம் மற்றும் ஜெனரேட்டர் அமைப்பாளர்களையும் இணைக்க வேண்டும். சேலம் மாவட்ட ஒலிபெருக்கி மின் அலங்காரம் மற்றும் ஜெனரேட்டர் அமைப்பாளர்கள் முன்னேற்ற நலச் சங்கத்தின் 53 வது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் தமிழக அரசுக்கு கோரிக்கை.
சேலம் மாவட்ட ஒலிபெருக்கி மின் அலங்காரம் மற்றும் ஜெனரேட்டர் அமைப்பாளர்கள் முன்னேற்ற நலச் சங்கத்தின் 53வது ஆண்டு சங்க உறுப்பினர்கள் பொதுக்குழு கூட்டம் சேலம் அன்னதானப்பட்டி பகுதியில் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் அர்ஜுனன் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்குழு கூட்டத்தில் செயலாளர் வினோத் பாபு மற்றும் பொருளாளர் பாஸ்கரன் முக்கிய நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். சங்கத்தின் செயல்பாடுகள் குறித்தும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்ட இந்த பொதுக்குழு கூட்டத்தில் இந்த தொழிலையே நம்பி உள்ள பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் நலன் பெற வேண்டி பல்வேறு முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டன.
தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் ஒலிபெருக்கி மின் அலங்காரம் மற்றும் ஜெனரேட்டர் அமைப்பாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் நலன் கருதி நல சங்கத்திற்கு என புதிதாக நிலம் வாங்கி அதில் நல சங்கத்திற்கான ஒரு கட்டிடம் கட்டி அந்த கட்டிடத்தில் இனி வரும் நாட்களில் சங்க கூட்டங்களை நடத்துவது என்றும் தமிழகத்தில் கட்டுமான தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் உள்ளதை போன்று அதே கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் ஒலிபெருக்கி மின் அலங்காரம் மற்றும் ஜெனரேட்டர் அமைப்பாளர்கள் மற்றும் தொழிலாளர்களையும் இணைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் நலச் சங்கத்திற்கு என்று தனியாக ஒரு அறக்கட்டளையை தொடங்கி அறக்கட்டளைக்கு என பெறப்படும் நன்கொடைகளை சங்கத்தின் முன்னேற்றத்திற்காகவும் தொழிலாளர்களின் நலனுக்காகவும் பயன்படுத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
இது தவிர பல்வேறு முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. இந்த பொதுக்குழு கூட்டத்தில் சேலம் மாநகரம் உட்பட மாவட்ட முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.



0 coment rios: