சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
இந்திய அரசியல் அமைப்பு தந்தையின் 69 வது நினைவு தினம். ராகுல் இளைஞர் விளையாட்டு மற்றும் அனைத்து தற்காப்பு கலை சங்கத்தினர் சட்ட மாமேதையின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.
இந்திய அரசியலமைப்பின் தலைவரும் சட்ட மாமேதையும் பாபாசாகேப் என்று அனைவராலும் போற்றப்படும் அண்ணல் அம்பேத்கரின் 69 ஆவது நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனைத்து அரசியல் கட்சியினராலும் அனுஷ்டிக்கப்பட்டது. அதன்படி இந்திய தேசிய காங்கிரஸின் ராகுல் இளைஞர் விளையாட்டு மற்றும் அனைத்து தற்காப்பு கலை சங்கத்தின் சார்பில் சட்ட மாமேதையின் நினைவு தினத்திற்கு மரியாதை செய்யும் நிகழ்வு சேலம் உடையாபட்டி பகுதியில் உள்ள அண்ணல் அம்பேத்கர் சிலையில் நடைபெற்றது. அமைப்பின் தலைவர் விஜயலட்சுமணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஓ பி சி பிரிவு மாநில துணை செயலாளர் சுப்ரமணி ராகுல் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் பொதுச் செயலாளர் சீனிவாசன் அகில இந்திய ஒருங்கிணைப்பாளர் குலாப் ஜான் தேசிய செயலாளர் ராஜேஷ் மாநில ஒருங்கிணைப்பாளர் பகத் எஸ்சி எஸ்டி பிரிவு மாவட்ட தலைவர் சிவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அண்ணல் அவர்களின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதைத் தொடர்ந்து சேலம் அம்மாபேட்டை மஞ்சம்பட்டி பகுதியில் வைக்கப்பட்டிருந்த அலங்கரிக்கப்பட்டிருந்த அண்ணன் அம்பேத்கரின் டிஜிட்டல் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்ததுடன் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.



0 coment rios: