காளிங்கராயன் கால்வாய் தூய்மையுற விழிப்புணர்வு மாரத்தான் ஆலோசனைக் கூட்டம் :
டிச: 15- மொடக்குறிச்சி
சோளாங்காபாளையம் தனியார் மண்டபத்தில் காலிங்கராயன் கால்வாய் நீர்வளம் நிலவலம் தூய்மையுற காளிங்கராயன் பாசன விவசாயிகள் சங்கம் சார்பாக விழிப்புணர்வு மாரத்தான் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு காலிங்கராயன் பாசன விவசாயிகள் சங்கம் தலைவர் வெந்தபாளையம் நடராஜ், தலைமை தாங்கினார்,செயலாளர் செல்வகுமார், ஒருங்கிணைப்பாளர்கள் கந்தசாமி,
கோம்புபாளையம் தேவராஜ் ஆகியோர், காலிங்கராயன் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கம் தலைவர் P. K சேதுராஜ், செயலாளர் A.நல்லசாமி பொருளாளர் S.அசோக்குமார் மற்றும் விவசாயிகள் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் புதிய சோலார் பேருந்து நிலையத்திற்கு காலிங்கராயன் பெயர் சூட்ட வேண்டும் என்றும்
காலிங்கராயன் வாய்க்கால் தூய்மை பெற வேண்டும் என்ற நோக்கத்தை வலியுறுத்தி வரும் ஜனவரி 18ஆம் தேதி விழிப்புணர்வு மாறத்தான் போட்டி கணபதிபாளையம் நால் ரோட்டில் துவங்கி நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
, இதில் 100 க்கும் முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டனர்.



0 coment rios: