சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
தமிழக விவசாயிகளின் நலனில் மத்திய அரசு நடுநிலையோடு செயல்பட வேண்டும். 2026 சட்டமன்றத் தேர்தலில் NDA கூட்டணி ஆட்சி மாற்றத்தை தமிழ் மக்கள் விரும்புவார்கள். பிரதமருக்கு உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி அறிக்கையின் வாயிலாக நினைவூட்டல்.
உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர்கள் வேலுச்சாமி பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு அறிக்கையின் வாயிலாக நினைவூட்டல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் வருகின்ற சட்ட மன்றத் தேர்தலில், பாஜக தேசிய ஜனநாயக கூட்டணியைதான் தமிழ்நாடு விரும்புகிறது என்று செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்ற தேர்தல் பொது கூட்ட பிரச்சாரத்தின் போது தமிழகத்திற்கு வருகை தந்த இந்திய பாரத பிரதமர் நரேந்திர மோடி கூறிய வார்த்தை தமிழகமே திரும்பி பார்க்க வைக்கும் வகையில் பேசுபொருளாக இருந்தது தமிழக விவசாயிகள் தேசிய ஜனநாயக கூட்டணியை விரும்ப வேண்டும் என்றால் மத்திய அரசு ஏற்கனவே நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு கொடுத்த தேர்தல் வாகுறுதியான விவசாயிகள் விளை நிலத்தில் விளைவித்த விளை பொருட்களுக்கு லாபகரமான விளை நிர்ணயம் MSP-யை உடனடியாக அறிவித்தது விவசாயிகள் பயன்பெறும் வகையில் நடைமுறைக்கு மத்திய அரசு கொண்டுவர வேண்டும்.
மேலும் வருகின்ற 2026-2027 ஆம் ஆண்டு மத்திய அரசு நிதிநிலை அறிக்கையில் நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் வேளாண்துறை மூலம் வளர்ச்சி பெறும் வகையில் விவசாயிகளுக்கு மானிய திட்டம் மூலம் வழங்கப்படும் நிதி இனிவரும் காலங்களில் நேரடியாக விவசாயிகள் வங்கி கணக்கு எண்ணிற்கே மத்திய அரசு வழங்க வேண்டும்.
நாடுமுழுவம் உள்ள விவிசாயிகளின் நீண்ட கால கோரிக்கையான விவசாயிகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வாங்கிய பயிர் மற்றும் பண்ணை அபிவிருத்தி கடன் முழுவதும் மத்திய அரசு உடனடியாக தள்ளுபடி செய்யவேண்டும். தமிழக விவசாயிகள் நலன் கருதி மத்திய அரசு ஏற்கனவே அறிவித்த கோதாவரி காவேரி இணைப்பு திட்டம் விரைந்து செயல்படுத்தி விவசாயிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில் 2026-2027 ஆம் ஆண்டு மத்திய அரசு நிதிநிலை அறிக்கையில் கூடுதலாக நிதி ஒதிக்கீடு செய்யவேண்டும்.
தமிழக விவசாயிகள் வாழ்வாதாரம் வளர்ச்சியடையும் வகையில் புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புடன் கூடிய தேசிய வேளாண் கல்லூரியை, மத்திய அரசு வரும் காலங்களில் 2026-2027ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் மத்திய அரசு அறிவித்து தமிழக விவசாயிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வர முன்னேற்பாடு குறித்து தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசு தலையிட்டு தமிழ்நாட்டிற்கு உண்டான காவிரி உரிமை பங்கீட்டு தண்ணீரை கர்நாடகா மாநிலத்தில் இருந்து தினந்தோறும் விகிதாச்சார அடிப்படையில் காவிரியில் திறந்து விட மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.காவிரி தண்ணீரை இனிவரும் காலங்களில் பருவம் தவறாமல் தமிழ்நாட்டிற்கு காவிரி உரிமை தண்ணீரை கர்நாடகா மாநிலத்தில் இருந்து முறையாக திறந்துவிட இனிவரும் காலங்களில் மத்திய அரசு நடுநிலையோடு செயல்பட வேண்டும்.
எனவே அதன் பிறகுதான் தமிழக விவசாயிகள் 2026 ல் நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜக தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி மாற்றத்தை தமிழ்நாட்டில் தமிழ் மக்கள் விரும்புவார்கள் என்பதை மாண்புமிகு இந்திய பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் இந்த அறிக்கையின் வாயிலாக நினைவுபடுத்துகி றேன் என்று உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி குறிப்பிட்டுள்ளார்.



0 coment rios: