சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலம் மேற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் 77 வது குடியரசு தின விழா கொண்டாட்டம். மகாத்மா மற்றும் கர்மவீரர் ஆகியோரது திருவருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை.
இந்திய திருநாட்டின் 77 வது குடியரசு தின விழா நாடு முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக சேலம் மேற்கு மாவட்ட தமிழ் மாநில கட்சியின் சார்பில் நாட்டின் 77 வது குடியரசு தின விழாவை கொண்டாடும் விதமாக ஓமலூர் பேருந்து நிலையம் அருகே உள்ள மகாத்மா காந்தி மற்றும் கர்மவீரர் காமராஜர் ஆகியோரது திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ததோடு அனைவருக்கும் இனிப்புகளும் வழங்கப்பட்டன. ஓமலூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த நிகழ்விற்கு சேலம் மேற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர்கள் சுசீந்திரகுமார் மற்றும் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.
ஓமலூர் நகர தலைவர் மணிகண்டன் வரவேற்புரை ஆற்றிய இந்த நிகழ்வில், வட்டார தலைவர்கள் சேதுராமன், அபி மன்னன், தகவல் தொழில்நுட்ப பிரிவின் மாநில ஒருங்கிணைப்பாளர் ரகு நந்தகுமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து, தீண்டாமை ஒழிப்பு, தீவிரவாத ஒழிப்பு, மத நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒருமைப்பாடு போன்ற உறுதிமொழிகள் ஏற்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் அஜித் குமார், ராஜேந்திரன், கணேசன், மாரியப்பன், முத்து, ரமேஷ், முருகேசன் சரவணன் செந்தில்குமார் மனோஜ் குமார் விஜய் கூலிட்டு ஐம்பத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதே போல கருப்பூர் பேருந்து நிலையத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தியடிகள் மற்றும் கர்மவீரர் காமராஜரின் திரு உருவப்படத்திற்கு கருப்பூர் நகர தலைவர் அரவிந்த் குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்ட நிகழ்ச்சியில் அனைவருக்கும் இனிப்புகளும் வழங்கப்பட்டன.



0 coment rios: