சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
புதிய பாதையில் காங்கிரஸ் கட்சி பயணத்தை தொடரும்... சேலத்தில் நடந்த காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் பதவி ஏற்பு விழாவில் முன்னாள் தலைவர் தங்கபாலு தெரிவித்தார்....
சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் மூன்று மாவட்டங்களில் புதிய தலைவர்கள் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட முன்னாள் மத்திய அமைச்சரும் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஆன தங்கபாலு நிருபர்களிடம் கூறுகையில், தமிழக காங்கிரசுக்கு புதிய மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் காங்கிரஸ் புதிய பயணத்தை தொடர் உள்ளது.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தமிழக முற்பட 14 மாநிலங்களில் மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் உட்பட பல்வேறு பதவிகளில் மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.
அதன்படி தமிழகத்தில் புதிய காங்கிரஸ் தலைவர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் கட்சியின் வளர்ச்சி மற்றும் திட்டங்களை செயல்படுத்துவார்கள்.
தமிழக அரசியலில் இதுவரை நடக்காததெல்லாம் நடக்கிறது. யாருக்கும் யாரு எதிரி அல்ல.
சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்காக தமிழகத்தில் 6000 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
அவர்களில் தகுதியானவர்கள் போட்டியிடும் வாய்ப்பை பெறுவார்கள்.
தமிழகத்தில் தொடர்ந்து திமுகவினர் காமராஜரையும், காங்கிரஸ் கீழ்மட்ட தலைவர்களையும் அவமதிக்கும் நிலையில், இரண்டாம் கட்ட தலைவர்கள் மௌனம் காப்பது ஏன், தற்போது சேலம் மாநகர காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சாரதா தேவியை அரசு விழாவில் திமுகவினர் புறக்கணித்ததும் அவமதித்த செயலும் அரங்கேறியது என்ற கேள்விக்கு, காங்கிரஸ் கட்சி அகில இந்திய அளவில் ஆட்சி அமைப்பது தான் முக்கியம் அதற்காக சில தியாகங்களை செய்துதான் ஆக வேண்டும்.
சில இடங்களில் தனி மனிதனை நாம் பார்க்க கூடாது கட்சியை தான் பார்க்க வேண்டும்.
தனிப்பட்ட காரணங்களுக்காக சிலர் அவமதிப்பதை காங்கிரஸ் கட்சி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது.
சில நேரங்களில் இதற்கு நாம் கண்டனம் எதிர்ப்பை தெரிவித்துதான் வந்துள்ளோம்.
தமிழகத்தில் காமராஜர் ஆட்சி அமைய வேண்டும் என்பது காங்கிரஸ் தொண்டர்களுக்கு ந ஆசை இருக்கத்தான் செய்கிறது. அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு அகில இந்திய அளவு தான் முக்கியத்துவம்.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் காலம் கனிந்து தான் வருகிறது. காமராசரின் காங்கிரஸ் ஆட்சி விரைவில் அமையும் என எதிர்பார்ப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது, சேலம் மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் சாரதா தேவி உட்பட நிர்வாகிகள் பலருடன் இருந்தனர்.



0 coment rios: