சனி, 3 ஜனவரி, 2026

சேலம் குகை காஸ்வே சாலை ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருவிழாவையொட்டி கோலாகலமாக நடைபெற்ற பண்டாரம் கொண்டு வருதல் நிகழ்ச்சி. ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

சேலம் குகை காஸ்வே சாலை ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருவிழாவையொட்டி கோலாகலமாக நடைபெற்ற பண்டாரம் கொண்டு வருதல் நிகழ்ச்சி. ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு. 

சேலம் குகை காசுவே சாலை சொசைட்டி அருகில் உள்ள ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் ஆண்டுதோறும் தை மாதம் தேவாங்க குளம் செழிக்கவும் குலவிருத்தி அடைய வேண்டியும் குழந்தைகள் கல்வி சிறக்கவும் தொழில் வளம் பெருகவும் அனைவருக்கும் ஆயுள் ஆரோக்கியம் பெற்று நலமுடன் வளமுடன் வாழவும் நீர் வளம் நிலவலம் மேன்மை அடைய வேண்டி விழா நடத்தப்படுவது வழக்கம். மூக்கனூர் டாக்டர் வெங்கடேசன் அவர்களின் செட்டுமை தனத்தில் கடந்த மாதம் பத்தாம் தேதி முகூர்த்தக்கால் மற்றும் கொடியேற்றுதல் நிகழ்வுகளுடன் 2026 ஆம் ஆண்டிற்கான விழா தொடங்கியது. தொடர்ந்து நாள்தோறும் அமலுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் அன்று மாலை பல்வேறு நிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவில் விழாவில் முக்கிய நிகழ்வான பண்டாரம் பெறுதல் நிகழ்ச்சி இன்று பக்தர்களின் சரண கோஷங்களுடன் வழக்கமான உற்சாகத்துடன் நடைபெற்றது. 
ஏலக்காடு குடும்பத்தார் சார்பாக திருவேங்கடம் சாலையில் இருந்து அம்மன் திருவிழாவிற்கு பண்டாரம் கொண்டு வருதல் நிகழ்ச்சி அந்த பகுதியை முக்கிய வீதிகளின் வழியாக நடைபெற்றன. அப்போது விழாவில் கலந்து கொண்ட ஏராளமான பக்தர்கள் அம்மனின் சரணகோஷங்கள் முழங்க ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து வரும் 5 ம் தேதி பண்டாரம் கொடுத்து அழைத்தல் நிகழ்ச்சியும் ஏழாம் தேதி வெள்ளகோட்டை அச்சு வெல்லம் பெறுதல் நிகழ்ச்சியும், வரும் 14ஆம் தேதி அம்மனுக்கு பண்டாரம் கட்டி அழைத்து வருதல் நிகழ்ச்சியும் தொடர்ந்து அன்று மாலை விக்னேஷ்வர பூஜை வாஸ்து சாந்தியுடன் திருவிழா பந்தலில் நடைபெற உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து வரும் 15ஆம் தேதி விழாவின் முக்கிய நிகழ்வான ஸ்ரீ மகா சக்தி அழைப்பு தொடர்ந்து 16ஆம் தேதி மகா சாமுண்டி அழைப்பு அதனை தொடர்ந்து 17ஆம் தேதி திருமஞ்சனம் மற்றும் பானக மெரவனை நிகழ்ச்சியும் தொடர்ந்து அன்று மாலை ஸ்ரீ மகா ஜோதி அழைப்பு நிகழ்வுடன் மகா தளிகை பூஜை பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளதாகவும் விழாவின் இறுதியாக வரும் 18ஆம் தேதி காலை 10:30 மணி அளவில் மஞ்சள் நீர் மெரவனை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளதாக திருவிழா நிர்வாக குழு நிர்வாகிகள் தெரிவித்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவில் திருவிழா நிர்வாக குழு தலைவர் மல்லேசன் செட்டியார் செயலாளர் ஜெகநாதன் பொருளாளர் சீதாராமன் துணை செயலாளர்கள் மல்லிகார்ஜுனன் கோயில் மளிகை விசுவநாதன் வனவாசி சரவணன் உள்ளிட்டோர் சிறப்பாக செய்து வருகின்றனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: