சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலத்தில் பிரசித்தி பெற்ற அரிசிபாளையம் ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் தை பெருவிழாவையொட்டி மகா சக்தி அழைப்பு நிகழ்ச்சி. ஆயிரக்கணக்கான வீர குமாரர்கள் தங்களது உடலில் கத்தி போட்டு அம்மனை வரவேற்றனர்.
சேலம் அரிசி பாளையத்தில் 120 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் தை பெருவிழா ஜனவரி மாதம் 15 ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதன் அடிப்படையில் நட்பாண்டிற்கான ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மன் தை பெருவிழாவை முன்னிட்டு இன்று திருக்கோவில் மகா சக்தி அழைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக சேலம் அரிசி பாளையம் தெப்பக்குளம் அருகே உள்ள விநாயகர் ஆலயத்தில் இருந்து சக்தி அழைப்பு நிகழ்வு தொடங்கியது.அலங்கரிக்கப்பட்ட அம்மனின் உற்சவமூர்த்திக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
தொடர்ந்து அங்கு திரண்டு இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களின் சரண கோஷங்கள் முழங்க சக்தி அழைப்பு ஊர்வலம் தொடங்கியது. அப்பொழுது கலந்த ஒரு மாத காலங்களாக அம்மனுக்கு விரதம் இருந்து வீர குமாரர்கள் வழி நெடுங்கிலும் தங்களது உடல்களில் கத்தி போட்டு ரத்தம் வடிய வடிய ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மணி வரவேற்று சென்றனர். அரிசி பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளின் முக்கிய வீதிகளின் வழியாக நடைபெற்ற இந்த சக்தி அழைப்பு நிகழ்வானது இறுதியில் திருக்கோவிலை அடைந்தது. தொடர்ந்து மூலவரான ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மனுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு விழா இனிதே தொடங்கியது.
தொடர்ந்து மாலை வெள்ளம் கரும்பு ஆகியவற்றை கொண்டு அலங்கார பந்தலில் சிறப்பு பூஜையும், நாளை பதினாறாம் தேதி பண்டாரி மற்றும் சாமுண்டி அழைத்தல் நிகழ்வும் தொடர்ந்து 19ஆம் தேதி மஞ்சள் நீர் மேலமனை தொடர்ந்து மாலை சதாபரண நிகழ்வுடன் இந்த ஆண்டிற்கான விழா இனிதே நிறைவு பெற உள்ளது. அரிசிபாளையம் ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவில் தைப்பிருவிழாவில் மகா சக்தி அழைப்பு நிகழ்ச்சி வெற்றிகரமாக நிறைவு பெற்றது.
அப்பொழுது திரண்டு இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கைகளை தட்டியும் அம்மனின் சரண கோஷங்களை எழுப்பியும் வழிபட்டது விண்ணை பிளக்கும் வகையில் அமைந்திருந்தது.
பட்டக்காரர் செட்டி தனக்காரர்கள் பெரிய தனக்காரர் மற்றும் குலமக்கள் அனைவரின் முன்னிலையிலும் ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு மகாதீப ஆராதனைகள் காட்டப்பட்டன. விழாவிற்கான ஏற்பாடுகளை சேலம் அரிசிபாளையம் ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் பெருவிழா கமிட்டி தலைவர் ரசம். ரவி செயலாளர், ஆட்ர. கார்த்திகேயன் மற்றும் பொருளாளர் ஆட்ர. மோகன் உள்ளிட்ட கௌரவ தலைவர்கள் துணைத் தலைவர்கள் துணைச் செயலாளர்கள் ஆலோசனை குழு உறுப்பினர்கள் துணைப் பொருளாளர்கள் பெருவிழா கமிட்டி செயல் உறுப்பினர்கள் என விழா கமிட்டியினர் மிகவும் சிறப்பாக செய்திருந்தனர்.



0 coment rios: