சேலம்.
S.K. சுரேஷ் பாபு.
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை சமத்துவ பொங்கல் ஆக கொண்டாடி மகிழ்ந்த ராகுல் இளைஞர்கள் மற்றும் அனைத்து தற்காப்பு கலைத்துறை நிர்வாகிகள்.
தமிழர் திருநாளாம் பொங்கல் திருவிழா போகையுடன் தொடங்கி, தொடர்ந்து நான்கு நாட்களுக்கு தமிழகத்தில் நகர்ப்புறம் உட்பட கிராமப்புறங்களிலும் வெகு உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில், ராகுல் இளைஞர்கள் மற்றும் அனைத்து தற்காப்பு கலை துறையின் சார்பில் சமத்துவ பொங்கல் விழா அம்மாப்பேட்டை காமராஜர் நினைவு வளைவு அருகே உள்ள விநாயகர் கோவிலில் நடைபெற்றது. அமைப்பின் தேசிய தலைவர் விஜய லட்சுமணன் தலைமையில் நடைபெற்ற விழாவில் புது பானையில் பொங்கலிட்டு மகிழ்ந்த நிர்வாகிகள் அனைவரும், ஸ்ரீ வாசவி கணபதி திருக்கோவில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகளை மேற்கொண்டனர்.
விஜய லட்சுமணன் உட்பட நிர்வாகிகளுக்கு திருக்கோவிலின் சார்பில் பரிவட்டம் கட்டப்பட்டு முதல் மரியாதை செலுத்தப்பட்டு ஸ்ரீ வாசவி கணபதிக்கு மகா தீபாராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து குழந்தைகள் உட்பட பெரியவர்கள் அனைவருக்கும் சுவாமிக்கு படைத்த பொங்கல் பிரசாதமாக வழங்கி மகிழ்ந்தனர். தேசிய அளவில் டென்னிஸ் கிரிக்கெட் பால் அணியில் நமது பிள்ளைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது இந்த பொங்கல் விழாவிற்கு தங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு என்றும் விரைவில் ஏழை எளியவர்கள் பயன்பெறும் வகையில் அடுத்த ஆண்டு தமிழர் திருநாளிற்குள் மிகப்பெரிய அளவிலான அகாடமி ஒன்று அமைக்கப்படும் என்று ராகுல் இளைஞர்கள் மற்றும் அனைத்து தற்காப்பு கலை துறையின் தேசிய தலைவர் விஜயலட்சுமணன் தெரிவித்தார்.
இந்த விழாவில் காங்கிரஸ் சிறுபான்மை துறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் இர்பான் உட்பட நிர்வாகிகள் ஸ்ரீனிவாசன் ராஜேஷ் தில்லை யுவராஜ் பகத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



0 coment rios: