சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
வாசன் கண் மருத்துவமனை சார்பில் சேலத்தில் சாலை பாதுகாப்பு வார விழா. ஓட்டுநர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியினை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மற்றும் சேலம் மேற்கு போக்குவரத்து ஆய்வாளர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள வாசன் கண் மருத்துவமனை சார்பில் ஓட்டுநர்களுக்கு சாலை பாதுகாப்பு மற்றும் கண் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழாவில் சேலம் வாசன் கண் மருத்துவமனையின் மருத்துவர்கள் டாக்டர் செல்வகுமாரி, டாக்டர் சந்தனா, டாக்டர் லாவண்யா மற்றும் டாக்டர் சுவர்ணலதா ஆகியோர் முன்னிலை வகித்த விழாவில், சேலம் வட்டார போக்குவரத்து அலுவலர் கோகிலா மற்றும் சேலம் மாநகர மேற்கு போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர் கிட்டு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு குத்து விளக்குகளை ஏற்றி வைத்ததோடு மட்டுமல்லாமல் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கான பதாகையும் வெளியிட்டு விழாவினை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினர்.
தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜனவரி 11ஆம் தேதி முதல் பிப்ரவரி 11ஆம் தேதி வரை சேலம் வாசன் கண் மருத்துவமனையில் அனைத்து ஓட்டுநர்களுக்கும் இலவச கண் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என நிர்வாகம் தெரிவித்த இந்த நிகழ்வில் கண் பாதுகாப்பு சாலை பாதுகாப்பு குறித்து விரிவாக விளக்கி கூறப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோ டாக்ஸி மற்றும் கனரக வாகன ஓட்டுநர்கள் கலந்து கொண்டு இலவச கண் பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்று பயன் பெற்றனர்.



0 coment rios: