சனி, 31 ஜனவரி, 2026

ராசிபுரம் அருகே வெண்ணந்தூர் பிரிவு சாலை பகுதியில் தனியார் நிறுவனத்தில் தனி அறையில் அடைத்து வைத்து பட்டியலின பெண் ஊழியர் சித்திரவதை செய்து தாக்குதல் நடத்திய கொடூரம். சம்பந்தப்பட்ட நிர்வாகத்தின் மீது தற்போது வரை வழக்கு பதிவு செய்தாத வெண்ணந்தூர் காவல்துறை. நிர்வாகத்திற்கு ஆதரவாக பஞ்சாயத்து செய்வதிலேயே குறியாக இருக்கும் வெண்ணந்தூர் காவல்துறையினர் என அகிம்சை வெற்றிக் கழக நிறுவனர் Dr இரா. காந்திசங்கர் குற்றச்சாட்டு.

 
சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

ராசிபுரம் அருகே வெண்ணந்தூர் பிரிவு சாலை பகுதியில் தனியார் நிறுவனத்தில் தனி அறையில் அடைத்து வைத்து பட்டியலின பெண் ஊழியர் சித்திரவதை செய்து தாக்குதல் நடத்திய கொடூரம். சம்பந்தப்பட்ட நிர்வாகத்தின் மீது தற்போது வரை வழக்கு பதிவு செய்யாத வெண்ணந்தூர் காவல்துறை. நிர்வாகத்திற்கு ஆதரவாக,  பஞ்சாயத்து செய்வதிலேயே குறியாக இருக்கும் வெண்ணந்தூர் காவல்துறையினர் என அகிம்சை வெற்றிக் கழக நிறுவனர் Dr இரா. காந்திசங்கர் குற்றச்சாட்டு. 

சேலம் நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மீனாட்சி கார்மெண்ட்ஸ் என்ற தனியார் நிறுவனம் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. இரண்டு ஷிப்டுகளாக பணிகள் நடைபெறும் இந்த நிறுவனத்தில் வெண்ணந்தூர் ராசிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 1500 க்கும் மேற்பட்ட பெண்கள் ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர். சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் CEO ஆக மணிவண்ணன் என்பவரும், ஸ்ரீதர், அமர்தீப், ரஞ்சிதா மற்றும் கனகா உள்ளிட்டவர்கள் CEO விற்றுக் கீழ் பணியாற்றும் அதிகாரிகளாக பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதனிடையே ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ் என்பவரின் மனைவி தேவி சம்பந்தப்பட்ட மீனாட்சி கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் பெண் ஊழியராக கடந்த 15 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 4  குழந்தைகளுக்கு தாயான பட்டியல் இனத்தைச் சார்ந்த தேவி, கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தான் பணி செய்யும் இடத்தில், தான் மரியாதை குறைவாக நடத்தப்படுவதாகவும், தான் மனரீதியாக தன்னை அவமானப்படுத்துவதாகவும், தகாத வார்த்தைகளால் தன்னை திட்டுவதாகவும் மனவேதனையில் இருந்துள்ளார். இந்த பிரச்சனை குறித்து தனது இளைய மகள் நந்தினியின் கணவர் மோகன் ராஜ் இடம் கூறியதாகவும் தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட மீனாட்சி கார்மெண்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை அலுவலகமான சென்னைக்கு இந்த சம்பவம் தொடர்பாக புகார் அளித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மீனாட்சி கார்மெண்ட்ஸ் நிறுவனத்தின் CEO மணிவண்ணன் ஸ்ரீதர் அமர்தீப் ரஞ்சிதா மற்றும் கனகா ஆகியோர், பட்டியலினத்தைச் சார்ந்த பெண் ஊழியர் தேவியை நிறுவனத்தில் உள்ள தனி அறையில் அடைத்து வைத்ததோடு மட்டுமல்லாமல் தங்களுக்கு எதிராக தலைமை அலுவலகத்தில் புகார் தெரிவிப்பாயா ? என்ற தோணியில் தகாத வார்த்தைகளால் திட்டியதோடு மட்டுமல்லாமல் அவரை அசிங்கப்படுத்தி அவமானப்படுத்தி கண்மூடித்தனமாக தாக்கியும் உள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் மிகுந்த  படுகாயங்களுடன், உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில் இந்த சம்பவம் குறித்து வெண்ணந்தூர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பட்டியலின பெண் தேவி புகார் அளித்தும் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் தேவியின் புகார் மீது சிஎஸ்ஆர் அல்லது எ ஃப் ஐ ஆர் எதுவும் பதிவு செய்யாமல் சம்பந்தப்பட்ட மீனாட்சி கார்மெண்ட்ஸ் நிறுவனத்திற்கு ஆதரவாக பஞ்சாயத்து செய்வதிலேயே குறியாக இருந்து வருவது வேதனையின் உச்சமாக இருக்கிறது என்று அகிம்சை வெற்றி கழகத்தின் நிறுவனர் Dr. இரா.காந்திசங்கர் மற்றும் அவரது நிர்வாகிகளுடன் வேதனை தெரிவித்துள்ளார்.
1500 க்கும் மேற்பட்ட பெண்கள் பணியாற்றி வரும் இந்த நிறுவனத்தில் தற்பொழுது வெளிவந்துள்ள இந்த அவலத்தை குறித்து நாமக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் தகவல் தெரிவித்தும் தற்பொழுது வரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது வேதனையின் உச்சம் என்றும், சம்பந்தப்பட்ட மீனாட்சி கார்மெண்ட்ஸ் நிறுவனத்தின் அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள நிலையிலும் கூட CEO என்று கூறிக்கொண்டு பெண்களை இழிவு படுத்தி வரும் மணிவண்ணனின் அறையில் எந்த ஒரு கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்படாதது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருவதாகவும், தேவியை போன்று எத்தனை பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது காவல்துறையினர் விசாரித்தால் மட்டுமே தெரியும் என்று குறிப்பிட்டதோடு மட்டுமல்லாமல் காவல்துறையினர் சம்பந்தப்பட்ட மீனாட்சி கார்மெண்ட்ஸ் நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வருவது பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதாகவும் தெரிவித்தார். பெண் தெய்வத்தின் பெயரைக் கொண்டு இயங்கி வரும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தில், பணியாற்றும் 1500 பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகவே உள்ளது என்று குற்றம் சாட்டிய அவர், தேவியை போன்று இன்னும் எத்தனை பெண்கள் இந்த மணிவண்ணன் என்பவரால் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர் என்பது தெரியவில்லை என்றார். மேலும் இந்த பிரச்சனையில் தமிழக அரசும் நாமக்கல் மாவட்ட நிர்வாகமும் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் தனி கவனம் செலுத்தி உரிய விசாரணை மேற்கொண்டால் மட்டுமே தேவையைப் போன்று எத்துனை பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது வெளிச்சத்திற்கு வரும் என்று குறிப்பிட்டதோடு மட்டுமல்லாமல், இந்த சம்பவத்தின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது உற்றார் உறவினர்கள் மற்றும் பொதுமக்களை திரட்டி கடுமையான போராட்டங்களில் மேற்கொள்ள உள்ளதாகவும்,  எச்சரித்துள்ளார். 
இந்த சம்பவத்தை செய்தி  சேகரிப்பதற்காக மீனாட்சி கார்மெண்ட்ஸ் நிறுவனத்திற்கு சென்ற நமது செய்தி குழுவினர்  செய்தி சேகரித்துக் கொண்டிருக்கும் பொழுது நொடி பொழுதில் வெண்ணந்தூர்  காவல்துறையினர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு வருகின்றனர்,  எதற்காக இந்த வீடியோ பதிவு இங்கு என்ன சம்பவம் நடந்தது என்று ஒன்றுமே தெரியாமல் காவல்துறையினர் கேள்வி கேட்டது வேடிக்கையாகவே இருந்தது. அது மட்டுமல்லாமல் தேசிய நெடுஞ்சாலை ரோந்து காவல் துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்து சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினரிடம் பேசினார்களே தவிர, செய்தி சேகரிக்க சென்ற செய்தி குழுவினரிடம் அவர்கள் பேசவே இல்லை. காரணம் மீனாட்சி கார்மெண்ட்ஸ் நிறுவனத்தின் இடம் காவல்துறையும்,  நெடுஞ்சாலை காவல் துறையிலும் விலை போய் விட்டார்களா ? என்பதை தமிழக அரசு தான் வெளிப்படுத்த வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து அரசியல் கட்சியினர் இருந்தபொழுதும் ஒரு கட்சியினர் கூட சம்பந்தப்பட்ட நிர்வாகத்தில் நடந்த இந்த சம்பவம் குறித்து இந்த பிரச்சனையை கையில் எடுக்கவில்லை என்பது வேதனையின் உச்சகட்டம். இந்த நிகழ்வின் போது அகிம்சை வெற்றி கழகத்தின் தேசிய பொருளாளர் திவாகர், மாநில தலைவர் மாதேஸ்வரன் மற்றும் மாநில செயலாளர் சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் நிறுவனர் காந்தி ஷங்கர் உடன் இருந்தனர். தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பிற்காக பல்வேறு சட்டங்களை இயற்றி செயல்படுத்தி வரும் தமிழக அரசு இந்த நாமக்கல் வெண்ணந்தூர் பிரச்சனையில் தலையிட்டு அங்கு பணியாற்றும் 1500 க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யுமா பொறுத்திருந்து பார்ப்போம்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: