சேலம்.
S.K. சுரேஷ் பாபு.
மத்திய அரசு இந்திய விவசாயிகளுக்கு எதிராக செயல்பட்டு அமெரிக்கா அரசாங்கத்திடம் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் செய்யும் பட்சத்தில், தமிழகத்தில் நடைபெறவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தலில் NDA கூட்டணி வெற்றிவாய்ப்பை இழக்க நேரிடும்.... மத்திய அரசுக்கு உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் சூசக எச்சரிக்கை.
விவசாய பெருங்குடி மக்களின் நலன் கருதி பல்வேறு போராட்டங்களை நடத்தி விவசாய மக்களின் தேவையை உழவர் பெருந்தகை நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் பூர்த்தி செய்து வருகிறது. அந்த வகையில் கடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலின் போது தமிழக விவசாயிகளின் நலனை பாதுகாக்க அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எதையும் ஆட்சி நிறைவடையக்கூடிய இந்த காலகட்டத்தில் கூட தற்பொழுது வரை திமுக அரசு செயல்படுத்தவில்லை என்பதும் நடைபெற உள்ள 2026 சட்டமன்ற தேர்தலில் எதிர்க்கட்சி வரிசையில் கூட திமுகவை அமர வைக்கப் போவதில்லை என்பது தமிழக விவசாயிகள் சங்கத்தின் குற்றச்சாட்டாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில், மத்திய அரசுக்கு எதிராக உழவர் பெருந்தகை நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி அறிக்கையின் வாயிலாக சூசக எச்சரிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அதன்படி சங்கத்தின் மாநில தலைவர் வேலுச்சாமி தெரிவித்துள்ளதாவது, மத்திய அரசிடம் அமெரிக்க அரசாங்கம் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் செய்வதற்கு கடந்த 2025 ஆண்டில் பலமுறை முயற்சித்த போது, உள்நாட்டு உணவு தானியம் வேளாண் சார்ந்த பொருட்கள் இறக்குமதி செய்ய ஒருபோதும் இந்திய அரசு அனுமதிக்காது, உள்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் தான் எனக்கு முக்கியம் என்று தெரிவித்தும், எனது தனிப்பட்ட நலனில் எவ்வளவு நெருக்கடி நிலை வந்தாலும் நான் அதை எதிர்கொள்ள தயார், உள்நாட்டின் வேளாண் கட்டமைப்புகளுக்கும் உணவுதானிய உற்பத்தியை அதிகரிக்கவும் எவ்வளவு நிதி வேண்டுமானாலும் மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய தயார் என்று அமெரிக்க அரசாங்கத்துக்கு கணத்த குரலோடு பதிலடி கொடுத்தார் மாண்புமிகு இந்திய பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள். ஆனால் சமீபத்தில் அதற்கு மாறாக அமெரிக்க அரசாங்கம் இந்திய வர்த்தக பொருட்களுக்கு வரிவிதிப்பு குறைத்ததன் காரணமாக மத்திய அரசு மீண்டும் அமெரிக்க அரசாங்த்திடம் நல்லுறவு ஏற்படுத்தும் வகையில் அமெரிக்க அரசாங்கத்திடம் இருந்து இந்தியாவிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உணவு தானியங்களை இறக்குமதி செய்ய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் செய்வதற்கு முயன்று வருவதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகி இந்திய விவசாயிகள் மனதில் மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இதனால் உள்நாட்டின் பொருளாதரம் பாதிக்கப்பட்டு இந்தியாவின் முன்னேற்றம் பின்தங்கிவிடும் என்பதை உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் மாண்புமிகு இந்திய பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நன்கு உணரவேண்டும் என இந்த அறிக்கையின் மூலம் நினைவுபடுத்துகிறது என்றும் மேலும் மத்திய அரசு இந்திய விவசாயிகளுக்கு எதிராக செயல்பட்டு அமெரிக்கா அரசாங்கத்திடம் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் செய்யும் பட்சத்தில் தமிழகத்தில் சமீபத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் அனைத்தும் வெற்றிவாய்ப்பை இழக்க நேரிடும் என்பதை மத்திய அரசுக்கு உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் எச்சரிக்கை விடுக்கிறது என பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு சூசக எச்சரிக்கையை விடுத்துள்ளார் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி.



0 coment rios: