சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
தமிழக விவசாயிகள் சங்கத்தின் மகாசபை கூட்டம் திருவண்ணாமலை வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழக விவசாயிகளின் நலன் கருதி பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதால் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும். உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி அழைப்பு.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் மாகாசபை கூட்டம் வருகிற 27.2.2026 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் தோக்கவாடி சந்தோஷம் மஹால் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில், தமிழக விவசாயிகளின் நீண்டகால கோரிக்கைகள் நிறைவேற்றுவது குறித்தும் அரசியல் கட்சிகள் தமிழக விவசாயிகளுக்கு வாக்குறுதி அளிப்பது சம்பந்தமாகவும் மத்திய மற்றும் மாநில அரசுகள் விவசாயிகளுக்கு எதிராக பல்வேறு நேரங்களில் செயல்படுவது குறித்தும் விவாதித்து முக்கிய முடிவுகள் எடுப்பது குறித்து கூட்டத்தில் கலந்து ஆலோசிக்க வேண்டியுள்ளது.
எனவே நடைபெறவுள்ள மாகாசபை கூட்டத்திற்கு மாநில மற்றும் மாவட்ட முக்கிய நிர்வாகிகள் விவசாயிகள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என செய்தி குறிப்பின் மூலம் அழைப்பு விடுக்கிறேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் தமிழக விவசாயிகள் சங்கம் மாநில தலைவர் வேலுச்சாமி அழைப்பு விடுத்துள்ளார்.



0 coment rios: