ஞாயிறு, 1 பிப்ரவரி, 2026

மகா சிவராத்திரி மாசி திருவிழாவை முன்னிட்டு சேலம் கிச்சிபாளையம் அங்கு அங்காள பரமேஸ்வரி திருக்கோவிலில் முகூர்த்த கால் நடுவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

மகா சிவராத்திரி மாசி திருவிழாவை முன்னிட்டு சேலம் கிச்சிபாளையம் அங்கு அங்காள பரமேஸ்வரி திருக்கோவிலில் முகூர்த்த கால் நடுவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. 

தமிழ் மாதங்களில் வரும் மாசி அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. இந்த திருவிழாவில் முக்கிய நிகழ்வான மயான கொள்ளை தமிழக முழுவதும் முயற்சியுடன் நடத்த ப்படுகிறது என்பது அனைவராலும் மறந்துவிடவும் மறுகவும் முடியாது. சேலத்தில் இதற்கு முத்தாய்ப்பாக புராண காலத்தில் அம்மன் நடத்திய நிகழ்வை மெய்ப்பிக்கும் விதமாக நடத்தப்படும் மயான கொள்ளை தமிழக அளவில் ஏன் உலக அளவில் பிரசித்தி பெற்றது. அந்த வகையில் சேலம் கிச்சிப்பாளையம் செல்வ விநாயகர் இணைந்த கைகள் நண்பர்கள் குழு தொடர்ந்து கந்த குடில் நண்பர்கள் குழுவின் மூன்றாவது தலைமுறையாக சுமார் 80 ஆண்டுகள் கடந்தும் சேலம் கிச்சிபாளையத்தில் உள்ள ஸ்ரீ அங்கு அங்காள பரமேஸ்வரி திருக்கோவில் மகா சிவராத்திரி மாசி திருவிழாவினை மிக எழுச்சியுடன் கொண்டாடி வருகின்றனர் என்பது அனைவருக்கும் தெரிந்தது. 
அந்த வகையில் மாசி திருவிழாவை முன்னிட்டு இன்று முகூர்த்தக்கால் நட்டு விழா தொடங்கப்பட்டது. சேலம் கிச்சிபாளையம் செல்வவிநாயகர் இணைந்த கைகள் நண்பர்கள் குழு, கந்தகுடில் நண்பர்கள் குழு மற்றும் ஸ்ரீ அங்கு அங்காள பரமேஸ்வரி திருக்கோவில் தலைவர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், முதற்கட்டமாக திருக்கோவிலில் வீட்டில் அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று முகூர்த்தக்கால் நடைபெற்றது தொடர்ந்து, ஆங்கார அங்காயி மற்றும் பரிவார தெய்வங்கள் பக்தர்களின் பக்தி பரவசத்துடன் அந்த பகுதிகளின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு, திருக்கோவிலில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்வு பக்தர்களின் சரண கோஷங்களுக்கு இடையே விமர்சையாக நடைபெற்றது.
பரிவார தெய்வங்களுடன் ஊர்வலமாக எடுத்துவரப்பட்ட கம்பத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து பக்தர்களின் பரவசத்துடன் திருக்கோவில் வளாகத்தில் நடப்பட்டு சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர் நடைபெற்ற அருள் வாக்கு கொடுக்கும் நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை அம்மனிடம் தெரிவித்து அதற்கான தீர்வையும் பெற்றனர். மாசித் திருவிழாவில் முதல் நாளான இன்று விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் திருக்கோவில் நிர்வாகத்தின் சார்பில் அன்னதானம் பிரசாதங்களாக வழங்கப்பட்டன. தொடர்ந்து, வரும் 16 ம் தேதி, ஸ்ரீ அங்கு அங்காளம்மன் பதிக்கள் திறப்பு மற்றும் காவலாளிகளுக்கு கண் திறப்பு நிகழ்ச்சியும் அதனைத் தொடர்ந்து கோவில் தலைமை பூசாரியும் தலைவருமான பன்னீர்செல்வம் குறத்தி வேடம் அணிந்து குறை கூடை ஊர்வலம் நிகழ்வும் நடைபெற உள்ளன. தொடர்ந்து மாலை சத்தாபரணத்தில் அம்மன் பவனி சக்தி அளித்து சக்தி கிரகத்துடன் முளைப்பாரி பூசை கூடை ஊர்வலமும் நடைபெற உள்ளது. இதனை அடுத்து வரும் 17ஆம் தேதி நிறைந்த அமாவாசை அன்று புராண நிகழ்வை மெய்ப்பிக்கும் மயான கொள்ளை புறப்பாடு பக்தர்களின் ஆரவாரம் எழுச்சி மற்றும் முயற்சியுடன் நடைபெற உள்ளது. 
வரும் 18ஆம் தேதி 101 பால்குட ஊர்வலம் எடுக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டதை தொடர்ந்து பொங்கல் வைத்து கிடா கோழி அம்மனுக்கு பலியிட்டு நேர்த்திக்கடன் செய்யும் நிகழ்வும் சிறப்பு படையல் பூஜையும், 19ஆம் தேதி அம்மனுக்கு அலங்கார பூஜை நடத்தப்பட்டு விழா இனிதே நிறைவு பெற உள்ளதாக, கோவிலின் தலைவர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மாசி மயான கொலை விழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் அனைத்தையும் கோவில் நிர்வாகிகள் செல்வராஜ் மணிகண்டன் பாலசுப்பிரமணி ஆகியோர் மிகவும் சிறப்பாக செய்து வருகின்றனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: