சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலத்தில் விபத்து மற்றும் சர்க்கரை நோயால் கால் இழந்தவர்களுக்கு செயற்கை கால் பொருத்தும் விழா. நூற்றுக்கும் மேற்பட்ட பயனாளிகள் பயன்.
சேலம் மிட்டம் ரோட்டரி சங்கம், சேலம் மாவட்ட உதவிக்கரம் மாற்றுத்திறனாளிகள் நலவாழ்வு சங்கம் மற்றும் சம்பந்தம் பின்னிங் மில் லிமிடெட் நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்திய கால் இழந்தவர்களுக்கு செயற்கை கால்கள் வழங்கும் விழா சேலம் அம்மாபேட்டையில் உள்ள எஸ் பி எம் எம் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. சேலம் மிட் டவுன் ரோட்டரி கிளப் தலைவர் திருமதி ருக்மணி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக சேலம் வருவாய் கோட்டாட்சியர் உதயகுமார், ரொட்டேரியன் சிவசுந்தரம் ரோட்டரி மாவட்ட ஆளுநர், உதவி கரம் மாற்றுத்திறனாளிகள் நல்வாழ்வு சங்க தலைவர் டாக்டர் அத்தியண்ணா மற்றும் ஸ்ரீ எம் எம் மருத்துவமனை தலைமை நிர்வாகி தேவராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, சேலம் நாமக்கல் விழுப்புரம் தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 120 பயனாளிகளுக்கு செயற்கை கால்களை பொருத்தி விழாவினை சிறப்பித்தனர். தொடர்ந்து நடைபெற்ற விழாவில் இழந்த பயனாளிகள் செயற்கைகால் பொருத்திய பிறகு பெற்ற அனுபவத்தை நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. சேலம் மிட் டேம் ரோட்டரி சங்க செயலாளர் கனிகாசலம் சேலம் மாவட்ட வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் கைவினைஞர்கள் சங்கத்தின் தலைவர் ஸ்ரீ ஆனந்த ராஜன் உட்பட சேலம் மாநகரின் முக்கிய பிரமுகர்கள் பயனாளிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



0 coment rios: