சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
மேடை நடன கலைஞர்களின் வாழ்வாதாரத்தில் ஒரு தலைபட்சமாக செயல்படும் சங்ககிரி மகுடஞ்சாவடி மற்றும் கொங்கணாபுரம் காவல் அதிகாரிகளை கண்டித்து சேலத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். தமிழ்நாடு கிராமிய நாட்டுப்புற மேடை நடன கலைஞர்கள் மற்றும் திருநங்கை மாற்றுத்திறனாளி அனைத்து கலைஞர்கள் நலச்சங்கம் சார்பாக நாளை நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான கலைஞர்கள் பங்கேற்க வேண்டும். சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பார்த்திபன் அறிக்கையின் வாயிலாக அழைப்பு...
தமிழ்நாடு கிராமிய நாட்டுப்புற மேடை நடன கலைஞர்கள் மற்றும் திருநங்கை மாற்று திறனாளி அனைத்து கலைஞர்கள் நலச் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பார்த்திபன் அறிக்கையின் வாயிலாக போராட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், தமிழகத்தில் திருவிழா காலகட்டங்களில் ஒவ்வொரு கிராமப்புறத்திலும் மேடை நடன கலைஞர்களின் ஆடல் பாடல் நிகழ்ச்சி அனைவரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. ஆனால் அது நாளடைவில் ஆபாசம் கலந்து தற்போது மேடை மேடை நடன கலை என்பது ஒரு பேச்சு பொருளாகவே மாறி உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. இதனை அடுத்து மாநகரம்,நகரம் மற்றும் கிராமப்புறங்களில் நடத்தப்படும் மேடை நடன நிகழ்ச்சிக்கு தமிழக அரசின் சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு தற்பொழுதும் அது கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் ஒரு சில இடங்களில் தமிழக அரசின் கட்டுப்பாட்டையும் மீறி வெட்ட வெளியில் முகம் சுழிக்கும் அளவில் தற்பொழுது மேடை நடன கலை என்பது ஆபாச நடன நிகழ்ச்சி ஆகவே மாறி உள்ளது.
இதற்கு உதாரணம் சேலம் மாவட்டம் சங்ககிரி மகுடஞ்சாவடி மற்றும் கொங்கணாபுரம் உள்ளிட்ட கிராமப்புற பகுதிகளில் நடத்தப்படும் நடன நிகழ்ச்சிகளை சான்றாக உள்ளன. இதன் காரணமாக தமிழக அரசின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டு நடத்தப்படும் மேடை நடன கலை கலைஞர்கள் மிகவும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர். இதனை அடுத்து பலமுறை இந்த மூன்று காவல் நிலையங்களில் பணிகாற்றும் அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் ஆபாச நடன நிகழ்ச்சி நடத்துபவர்களுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர் என்றும் மாறாக புகார் அளிக்க செல்லும் கலைஞர்கள் மீது வழக்கு பதிவு செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டும் சேலம் மாவட்டத்தில் உள்ளது. ஒருதலைபட்சமாக செயல்படும் இது போன்ற மூன்று காவல் நிலைய அதிகாரிகளை கண்டித்து நாளை சேலம் கோட்டை மைதானத்தில் நண்பகல் 12 மணி முதல் 1 மணி வரை தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக தமிழ்நாடு கிராமிய நாட்டுப்புற மேடை நடன கலைஞர்கள் மற்றும் திருநங்கை மாற்று திறனாளி அனைத்து கலைஞர்கள் நலச் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பார்த்திபன் அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைத்து மேடை நடன கலைஞர்களும் பெரும் திரளாக பங்கேற்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார் பார்த்திபன்.



0 coment rios: