ஞாயிறு, 1 பிப்ரவரி, 2026

சேலம் அம்மாபேட்டை பகுதியில் உள்ள கூட்டுறவு நூற்பாலை தேர்தல் வாக்குறுதி படி திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க கோரி பாரதிய ஜனதா கட்சியின் நெசவாளர் பிரிவு சார்பில் கோரிக்கை மனு

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

சேலம் அம்மாபேட்டை பகுதியில் உள்ள கூட்டுறவு நூற்பாலை தேர்தல் வாக்குறுதி படி திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க கோரி பாரதிய ஜனதா கட்சியின் நெசவாளர் பிரிவு சார்பில் கோரிக்கை மனு

பாரதிய ஜனதா கட்சியின் நெசவாளர் பிரிவு மாநில தலைவர் அண்ணாதுரை தலைமையில் உறுப்பினர்கள் பத்துக்கும் மேற்பட்டோர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர் கலெக்டர் பிருந்தா தேவியை சந்தித்து கோரிக்கை மனு ஒன்று வழங்கினார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது சேலம் அம்மாபேட்டை பகுதியில் உள்ள கூட்டுறவு நூற்பாறையில் கடந்த 21 ஆண்டுகளாக மூடி உள்ளன அங்கு பணியாற்றிய 252 நிரந்தர தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு இதுவரை எந்தவித இழப்பு தொகை வழங்கப்படவில்லை பல்வேறு கட்ட போராட்டம் நடத்தியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை 252 குடும்பங்களும் வாழ வழி இல்லாமல் தவித்து வருகின்றனர் ஆலையை இயக்க மத்திய மாநில அரசுகள் ஆலய புதுப்பித்தல் செய்வதற்காக வைத்திருந்த நிதியிலிருந்து ஆலையை முழுமையாக இயக்காமல் மாறாக கட்டாய வி ஆர் எஸ் க்கு கடனாக புதுப்பித்தல் நிதியிலிருந்து பெற்று 735 தொழிலாளர்களை வெளியேற்றி உள்ளது 852 நிரந்தர தொழிலாளருக்கு பிஎஃப் முழுமையாக வட்டியுடன் கட்டவில்லை பிஎஃப் கமிஷனர் உத்தரவு வழங்கியும் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை எனவே பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரண வழங்க வேண்டும் என இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து மாநில தலைவர் அண்ணாதுரை கூறுகையில் சேலம் அம்மாபேட்டை பகுதியில் உள்ள கூட்டுறவு நூற்பாளையும் 31 ஏக்கர் உள்ளது அங்கு இருந்த இயந்திரங்கள் திருடப்பட்டுள்ளன மேலும் புதியதாக ஜவுளி பூங்கா உள்ளிட்ட ஜவுளி சார்ந்த தொழிற்சாலைகள் அமைக்க அதே இடத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் திமுக அரசு கூட்டுறவு நூற்பாலை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் வாக்குறுதியாக அறிவித்திருந்தது ஆனால் இதுவரை செய்யவில்லை எனவே மாவட்ட நிர்வாகம் பாதிக்கப்பட்ட 252 குடும்பங்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு நூற்பாளையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் திமுக தேர்தல் வாக்குறுதி படி செயல்படுத்த வேண்டும் என தெரிவித்தார். நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர். 

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: