சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலம் திருமணிமுத்தாறு ராஜவாய்க்காலில் கொட்டப்படும் கழிவுகளை தடுக்க இரும்பு வேலி அமைத்து எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும். தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் தங்கராஜ் மாவட்ட ஆட்சியர் இடத்தில் மனு.
தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் முன்னேற்ற சங்கத்தின் நிறுவனரும் மாநில தலைவருமான தங்கராஜ் உள்ளிட்ட விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் இடத்தில் மனு கொடுப்பதற்காக வந்திருந்தனர். அந்த மனுவில், சேலம் கொண்டலாம்பட்டி பைபாஸ் ரவுண்டானாவில் இருந்து புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலையில் ராஜவாய் காரில் தேவையற்ற கற்கள் கழிவுகள் கொட்டப்படுவதால் வாய்க்காலில் வரும் நீர் அடைக்கப்படுவதால் பாசனத்திற்கு வரும் நீர் பயன்படுத்த முடியாமல் விவசாயம் பாதிக்கப்படுகிறது. ராஜபாய் காலின் ஓரம் கம்பி வேலிகளை அமைத்து எச்சரிக்கை பலகை வைத்து விவசாயிகளுக்கு விவசாயம் செய்ய வாய்க்கால் நிறை முழுமையாக கிடைக்க உதவிட வேண்டி பாசன விவசாயிகள் சார்பில் அன்புடன் கேட்டுக் கொள்வதாக மனதில் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக பலமுறை கோரிக்கை மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை ஆகவே மாவட்ட ஆட்சியர் இந்த பிரச்சனையில் தலையிட்டு பாசன விவசாயிகளை கோரிக்கை மீது நடவடிக்கை எடுத்து உதவிட வேண்டுமாய் கேட்டுக் கொள்வதாகவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். உடன் விவசாயிகள் முன்னேற்ற சங்கத்தின் நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர்.
.



0 coment rios: