புதன், 29 ஏப்ரல், 2026

கடந்த காலங்களில் கருத்து கணிப்புகள் பெரும்பாலும் பொய்யான வரலாறு உள்ளது. எனவே கருத்துக்கணிப்பை விவசாயிகள் யாரும் வரவேற்கவில்லை. உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி கருத்து.

சேலம், 
S.K. சுரேஷ்பாபு. 

கடந்த காலங்களில் கருத்து கணிப்புகள் பெரும்பாலும் பொய்யான வரலாறு உள்ளது. எனவே கருத்துக்கணிப்பை விவசாயிகள் யாரும் வரவேற்கவில்லை. உழவர் பெருந்தலைவர்  நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி கருத்து.

17 வது தமிழக சட்டப்பேரவை காண தேர்தல் கடந்த 23ஆம் தேதி ஒரே கட்டமாக தமிழக முழுவதும் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. இந்திய அளவில் நடைபெற்ற ஐந்து மாநில தேர்தல்களில் இரண்டாவது வரலாற்றுச் சாதனையாக தமிழகத்தில் 85.15% வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த நிலையில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி அறிக்கை தனது கருத்தை வெளியிட்டுள்ளார். அதன் அடிப்படையில்,  
தற்போது தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கைக்கு முந்தைய  கருத்து கணிப்பு என்பது இது ஒரு கருத்து திணிப்பு. இதை விவசாயிகள், பொதுமக்கள் யாரும் நம்பவில்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில்  தி‌.மு.க ஆட்சியில் தமிழக விவசாயிகளுக்கு தேர்தல் வாக்குறுதிகள் கொடுத்ததை எதுவும் நிறைவேற்றாமல் தமிழக விவசாயிகளுக்கு எதிராக செயல்பட்டதன்  காரணமாக தமிழகத்தில் ஆட்சி மாற்றம் தேவை என உணர்ந்து தமிழகம் முழுவதும் விவசாயிகள் அனைவரும் ஒரே நிலைப்பாட்டோடு அணி வகுத்து திரண்டு நின்று அ.தி.மு.க கட்சி பொதுச்செயலாளர் மாண்புமிகு. எடப்பாடி K.பனிழனிசாமி அவர்கள்தான் 2026 ல் தமிழக முதல்வராக வரவேண்டும். தமிநாட்டிற்கு நல்லாட்சி தரவேண்டும் என்ற தாரக மத்திரத்தோடு தமிழக விவசாயிகள் அனைவரும் குடும்பம், குடும்பமாக கடந்த 23-ந் தேதி அன்று வாக்குசாவடி சென்று தனது ஜனநாயக கடமையை ஆற்றி வாக்களித்துள்ளார்கள் என்பதை இந்த அறிக்கையின் வாயிலாக உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில்  தெரிவித்துக்கொள்கிறேன்.
முந்தைய காலங்களில் இதுபோன்ற கருத்து கணிப்புகள் பெரும்பாலும் பொய்யான வரலாறு உள்ளது. எனவே கருத்துக்கணிப்பை விவசாயிகள் யாரும் வரவேற்கவில்லை. ஜனநாயகத்தை நிலைநாட்டும் செயல் வாக்குப்பதிவு. அதன் முடிவு வாக்கு எண்ணிக்கையில் தெரிந்துவிடும். இடையில் வரும் குழப்பங்களை பெதுமக்களும் நப்பவேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம் என்றும் தனது கருத்து பதிவில் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி குறிப்பிட்டுள்ளார்.


শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: