ஞாயிறு, 3 மே, 2026

தமிழகம் முழுவதும் ஒடுக்கப்பட்ட மக்களின் 1.5 ஹெக்டேர் பஞ்சமி நிலங்கள் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசின் ஆலோசனைக் கூட்டத்தில் 7 முக்கிய தீர்மானங்கள்.

சேலம், 
S.K. சுரேஷ்பாபு. 

தமிழகம் முழுவதும் ஒடுக்கப்பட்ட மக்களின் 1.5 ஹெக்டேர் பஞ்சமி நிலங்கள் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசின் கடலூர் ஆலோசனைக் கூட்டத்தில் 7  முக்கிய தீர்மானங்கள்.

சமூகம், அரசியல், கல்வி, பொருளாதாரம் மற்றும் மேம்பாடு நோக்கத்திற்காக செயல்பட்டு வரும் தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசின் கடலூர் மாவட்ட துவக்க விழா மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் லதா தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், கடலூர் மண்டல ஒருங்கிணைப்பாளர் கந்தசாமி, மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் ஹரிகிருஷ்ணன் மற்றும் புகழேந்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கிய கூட்டத்தில், நிர்வாகிகள் வினோத் ராமதாஸ் கண்ணன் தமிழரசன் செல்வம் மாலா மற்றும் நெடுமாறன் முன்னிலை வகித்தனர். 
தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசு அமைப்பின் நிறுவனரும் தலைவருமான சரஸ்ராம் ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு,  அமைப்பின் செயல்பாடுகள் குறித்தும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார். தொடர்ந்து நடைபெற்ற  ஆலோசிக்கப்பட்ட இந்த கூட்டத்தில், 
தமிழகம் முழுவதும் ஒடுக்கப்பட்ட மக்களின் 1.5 ஹிட்டேர் பரப்பளவு கொண்ட பஞ்சமி நிலங்கள் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும், கடலூர் மாவட்ட நிர்வாகம் பொது மக்களின் தேவைகளான குடிநீர் கழிவுநீர் தெரு மின் வசதி சுகாதாரம் நூலகம் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய தேவைகளையும் கிராமம் முழுவதும் செய்து கொடுக்க வேண்டும் மற்றும் கடலூர் மாவட்டம் முழுவதும் ஆய்வு செய்யாத மாவட்ட நல அதிகாரியை உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட ஏழு முக்கிய அம்ச தீர்மானங்கள் தமிழக அரசை வலியுறுத்தி நிறைவேற்றப்பட்டன. இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைப்பின் மண்டல மாவட்ட நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: