சேலம்,
S.K. சுரேஷ்பாபு.
பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற தவறும் பட்சத்தில் பன்ருட்டி ஊராச்சி அலுவலகம் முன் அல்லது உதவி இயக்குநர் ( கிராம பஞ்ச்சாயத்து ,) அலுவரகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம். தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசு கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டத்தில் தீர்மானம்.
தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசு கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் பண்ருட்டியில் நடைபெற்றது. மாநில ஒருங்கிணைப்பாளர் லதா தலைமையில் நடைபெற்ற இந்த ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 10 சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள் முன்னிலை வகித்தனர். தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசின் நிறுவனரும் தலைவருமான சரஸ்ராம் ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இந்த கூட்டத்தில், சங்கத்தின் செயல்பாடுகள் குறித்தும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில், கடலூர் மாவட்டம் பன்ருட்டி வட்டம்- பன்ரூட்டி ஊராட்சி நிர்வாகம் மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரியின் கவனத்திற்கு பல்வேறு முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. அதில் குறிப்பாக செம்மேடு பகுதி பஞ்சாயத்து வாழ் பட்டியலின ஒடுக்கபட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும், செம்மேடு ஊர் பகுதியில் பஸ் நிறுத்தம் ஏற்படுத்து வேண்டும், செம்மேடு பகுதியில் நூலகம் அமைத்து கொடுக்க வேண்டும், செம்மேடு வாழ் பட்டியலின மக்களுக்கு கழிவு நீர் கால்வாய் சுகாதார மையம் தெரு விளக்குகள் மயானத்திற்கு மின் விளக்கு வசதி அமைத்து கொடுத்திட வேண்டும்,
கடந்த 10 ஆண்டுகளில் செம்மேடு பகுதி வாழ் மக்களுக்கு ஒதுக்கிய பஞ்சாயத்து நிதி எவ்வளவு என்பதனை வெள்ளை அறிக்கை வழங்க வேண்டும் மற்றும்
மேற்குறிப்பிடப்பட்ட தீர்மானங்கள் குறித்து நடவடிக்கைகள் காலம் கடத்தினால் ஊர் மக்கள் ஒன்று திரண்டு ஒடுக்கபட்ட மக்கள் குடியரசு இயக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பு குழ பன்ருட்டி ஊராச்சி அலுவலகம் முன் அல்லது உதவி இயக்குநர் ( கிராம பஞ்ச்சாயத்து ,) அலுவரகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டத்தில் தீரமானம் நிறைவேற்றபட்டது.



0 coment rios: