புதன், 6 மே, 2026

தமிழகத்தில் ஏற்பட்ட அலையில் சிக்கிய அனைத்து கட்சிகளையும் சின்னாபின்னம் ஆக்கியவர் த.வெ.க தலைவர் விஜய்.. 2026 இல் மாற்றத்தை விரும்பிய தமிழக மக்களுக்கு ஐந்து ஆண்டுகள் முழுமையாக ஆட்சியை நடத்த திராவிட கட்சிகள் எந்தவிதமான நெருக்கடிகளையும் கொடுக்கக் கூடாது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர பக்தனான பாரப்பட்டி கனகராஜ் பேட்டி.

சேலம், 
S.K. சுரேஷ்பாபு. 

தமிழகத்தில் ஏற்பட்ட அலையில் சிக்கிய அனைத்து கட்சிகளையும் சின்னாபின்னம் ஆக்கியவர் த.வெ.க தலைவர் விஜய்.. 2026 இல் மாற்றத்தை விரும்பிய தமிழக மக்களுக்கு ஐந்து ஆண்டுகள் முழுமையாக ஆட்சியை நடத்த திராவிட கட்சிகள் எந்தவிதமான நெருக்கடிகளையும் கொடுக்கக் கூடாது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர பக்தனான பாரப்பட்டி கனகராஜ் பேட்டி. 

2026 ஆம் ஆண்டிற்கான 17 வது தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்தது. குறுகிய காலத்தில் கட்சியை தொடங்கி ஆட்சி அமைத்த பெருமை தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அவர்களே சாரும். என்றாலும் இந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற த.வெ.க  உட்பட பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவிற்கு பெரும்பான்மை கிடைக்காத சூழலில், தற்பொழுது ஆட்சி அமைப்பதற்கு உண்டான 118 இடங்களை நிரூபிப்பதற்காக த.வெ.க பிரதான கட்சிகள் உட்பட சிறிய கட்சிகளிடம் ஆதரவு கோரி பேச்சுவார்த்தை நடைபெற்ற வண்ணமே உள்ளன. இந்த நிலையில் தமிழகத்தின் 17 ஆவது முதலமைச்சர் ஆக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நாளை பதவி ஏற்க உள்ளார். அவருடன் அமைச்சர்களும் பதவி ஏற்க உள்ளனர். இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் தீவிர பக்தனான பாரப்பட்டி கனகராஜ், நம்மிடையே கூறுகையில், தமிழக அரசியல் களத்தில் ரஜினிகாந்த் வராதது வெற்றிடமாகவே தற்போது வரை கருதப்படுவது குறித்தும் அவரது இடத்தை த.வெ.க தலைவர் விஜய் பூர்த்தி செய்துள்ளாரா என்ற என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. இதற்கு பாரப்பட்டி கனகராஜ் பதில் அளிக்கையில், 
சூப்பர் ஸ்டார் அவர்கள் அரசியல் களத்திற்கு வராதது அந்த வெற்றிடம் தற்பொழுது வரை அப்படியே தான் இருந்து வருகிறது என்றும் குறிப்பிட்டார். மேலும் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்று தமிழக முதலமைச்சராக விஜய் அமர்வார் என யாரும் எதிர்பார்க்கவில்லை என்றும், 2026  சட்டப்பேரவை தேர்தலில் தமிழகத்தில் வீசி அலையின்  அடிப்படையில், சிக்கிய பிரதான கட்சிகள் உட்பட அரசியல் கட்சிகள் அனைத்தும் சிக்கி சின்னாபின்னம் ஆகிவிட்டது என்றார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அரசியல் களத்திற்கு வந்து  வந்து கட்சி தொடங்கி இதுபோன்று தேர்தலை சந்தித்து இருந்தால் 150 இடங்களுக்கு மேலாக கிடைத்திருக்கும் என்றும், என்றாலும் தமிழகத்தின் 17 வது முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நாளை தமிழக முதல்வராக பொறுப்பேற்பதற்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்தார். மேலும் தற்பொழுது உள்ள சூழலில் ஆட்சி அமைக்க 118 இடங்கள் வேண்டும் ஆனால் 108 இடங்களில் மட்டுமே தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்றதன் அடிப்படையில் பிரதான கட்சிகள் உட்பட சிறிய கட்சிகளிடம் ஆதரவு கோரி தமிழக வெற்றிக்கழகம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டுள்ளது என்றாலும், தமிழக வெற்றி கழகம் அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் ஐந்து ஆண்டுகள் சிறப்பாக பூர்த்தியாகும் என்று குறிப்பிட்ட பாரப்பட்டி கனகராஜ், எதிர்வரும் 5 ஆண்டுகள் முழுமையாக நீடிக்கும் என்பதோடு மட்டுமல்லாமல் தமிழக மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்து இந்த முடிவை தெரிவித்து இருக்கும் நிலையில் பிரதான கட்சிகளான அதிமுக மற்றும் திமுக இந்த ஐந்து ஆண்டுகளும் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்கும் விஜய் ஃப்ரீயாக பணியாற்ற எந்தவிதமான நெருக்கடிகளும் கொடுக்கக் கூடாது என்றும் கேட்டுக்கொண்டார். 
தேர்தல் அறிக்கை என்று தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் பல அறிவிப்புகளை வெளியிட்டு இருந்தாலும் அதனை முழுமையாக செயல்படுத்தினாலே போதும் என்றும் கூடுதலாக புதிய திட்டங்களை அறிவித்து அதை செயல்படுத்த வேண்டும் என்றும் தமிழக முதலமைச்சர் ஆக பொறுப்பேற்ற பிறகு தமிழக வெற்றி கணக்க தலைவர் விஜய் சேலம் வரும்போது அவரிடம் சேலம் மாவட்டத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு கோரிக்கைகள் அவரிடம் ரஜினி ரசிகர்களின் சார்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர பக்தன் என்ற அடிப்படையில் எனது தலைமையில் கோரிக்கை மனு வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: