புதன், 6 மே, 2026

சேலத்தில் ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியை பாராட்டு வழா.

சேலம்,
S.K. சுரேஷ்பாபு.

சேலத்தில் ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியை பாராட்டு வழா.

சிந்தி கல்விச் சங்கத்தின் சிந்தி இந்து உதவி பெறும் தொடக்கப் பள்ளி சேலம் நாராயண நகர் பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கடந்த 1987 ஆம் ஆண்டு முதல் 2026 ஆம் ஆண்டு வரை இடைநிலை ஆசிரியை ஆக பணியாற்றிய ஸ்ரீமதி சித்ரா மகேஸ்வரி ஆசிரியை பணி ஓய்வு பெற்றார். ஓய்வுபெறும் ஆசிரியைக்கு  பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. 
பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி லதா தலைமையில் நடைபெற்ற இந்த பாராட்டு விழாவில், பள்ளியின் தலைவர் ஸ்ரீ. ராம்சந்த் டி கிங்கர், பள்ளியின் தாளாளர் ஸ்ரீ. நரேஷ் கே கிங்கர், பள்ளியின் செயலர்
திரு. மகேஷ் டி சாவ்லா மற்றும் பள்ளியின் பொருளாளர் மற்றும்திரு. தீபக் ஜி பத்திஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பணி ஓய்வு பெற்ற ஆசிரியைக்கு பொன்னாடை போர்த்தியும் நினைவு பரிசுகள் வழங்கி கௌரவித்தனர். தொடர்ந்து பள்ளியில் பணியாற்றும் அனைத்து ஆசிரிய பெருமக்கள் சார்பிலும் ஓய்வு பெற்ற ஆசிரியைக்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டன. நிகழ்வில் அந்த பகுதியின் முக்கிய பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.



শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: