செவ்வாய், 26 மே, 2026

தமிழக முதலமைச்சரை சந்திக்க விடாமல், தமிழக விவசாயிகள் சங்க நிர்வாகிகளை தடுத்து நிறுத்திய காவல்துறையினரால் பரபரப்பு. தமிழக விவசாயிகளே காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமாகவும் கீழ்த்தரமாகவும் நடத்துவதாகவும் தமிழக விவசாயிகள் சங்கம் மாநில தலைவர் வேலுச்சாமி ஆவேசம்.

சேலம், 
S.K. சுரேஷ்பாபு. 

தமிழக முதலமைச்சரை சந்திக்க விடாமல், தமிழக விவசாயிகள் சங்க நிர்வாகிகளை தடுத்து நிறுத்திய காவல்துறையினரால் பரபரப்பு. தமிழக விவசாயிகளே காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமாகவும் கீழ்த்தரமாகவும் நடத்துவதாகவும் தமிழக விவசாயிகள் சங்கம் மாநில தலைவர் வேலுச்சாமி ஆவேசம். 

தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றி கழக தலைமையிலான தமிழக அரசின் முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களை சந்திக்க நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் உட்பட மாநில நிர்வாகிகள் சென்னை சென்றிருந்தனர். தமிழக விவசாயிகளின் தீர்க்கப்படாத பிரதான கோரிக்கைகளை வலியுறுத்துவதற்கு நேரம் கேட்பதற்காக தமிழக முதலமைச்சரை சந்திக்க சென்ற தமிழக விவசாய பெருங்குடி மக்களை சென்னை காவல்துறையினர், தமிழக முதலமைச்சரை சந்திக்க அனுமதிக்காமல், தடுத்து நிறுத்தியதோடு மட்டுமல்லாமல் அவர்களை அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டது தமிழக அளவில் விவசாயிகள் இடையே கடும் கொந்தளிப்பினை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையைச் சேர்ந்த தமிழக காவல்துறையினரின் இந்த அநீதியான செயலை கண்டித்து, நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் செய்தியாளர்களிடம் ஆவேசமாக பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள TVK தலைவரும் தமிழக முதலமைச்சர் ஆன ஜோசப் விஜய் அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும் தெரிவித்து தமிழக விவசாயிகளின் நீண்ட கால பிரச்சனைகளான மேகதாது அணை விவகாரம், தென்னை மற்றும் பனை மரங்களில் இருந்து கள்ளிறக்க விதிக்கப்பட்ட தலையை நீக்க கோருவது, நதிநீர் இணைப்பு விவகாரம் மற்றும் பயிர் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு பிரதான பிரச்சனைகள் குறித்து பேசுவதற்கு நேரம் ஒதுக்கி தர வேண்டும் என்று தமிழக முதல்வரை சந்தித்து கடிதம் கொடுப்பதற்காக வந்த தங்களை தமிழக காவல்துறையை சார்ந்த சென்னை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதோடு மட்டுமல்லாமல் காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்ட செயலை நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் வன்மையாக தனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் தலைவர் வேலுச்சாமி. 
மேலும் அவர் கூறுகையில் அனுமதி கேட்டு நேரம் ஒதுக்கி தர அனுமதி கேட்க வந்தபோது தமிழக முதலமைச்சர் சந்திக்க விடாமல் காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதோடு மட்டுமல்லாமல் தமிழக விவசாயிகளை கீழ்த்தரமாக காவல்துறையினர் நடத்துகின்றனர் என்று குற்றம் சுமத்திய வேலுச்சாமி, தமிழக விவசாயிகளுக்கு சென்னையில் ஏற்பட்ட அநீதியை தமிழக முதல்வரின் கவனத்திற்கு கண்டிப்பாக கொண்டு செல்வோம் என்றும், தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட பயிர் கடன் தள்ளுபடி என்பதை ஏற்க முடியாது என்றும், தமிழக முதலமைச்சர் மறுபரிசீலனை செய்து கடந்த காலங்களை போன்று பிரித்தாலும் சூழ்ச்சி இல்லாமல் தமிழக விவசாயிகளின் நலன் கருதி முழு விவசாய கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். தொடர்ந்து பேசிய அவர் விவசாயிகளின் நலன் கருதி தமிழக அரசு அறிவிக்கும் திட்டங்கள் ஆகட்டும் செயல்பாடுகள் ஆகட்டும் முன்கூட்டியே விவசாய சங்க பிரதிநிதிகளை அழைத்து பேசி மட்டுமே சிறு குறு விவசாயிகளின் பாதுகாக்கும் வகையில் திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்பதோடு மட்டுமல்லாமல் இது போன்ற பயிர் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் தமிழக முதலமைச்சரின் இந்த அறிவிப்பு ஏமாற்றம் அளிப்பதாக உள்ளதால் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தமிழக அரசு தவருபட்சத்தில் தமிழகத்தில் மிகப்பெரிய அளவிலான தொடர்ச்சியான போராட்டங்கள் மேற்கொள்ள ப்படும் என்று எச்சரிக்கை விடுத்த தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி, தமிழக முதல்வரை சந்திக்க காவல்துறையினர் தடுத்து நிறுத்திய சம்பவம் குறித்து ஊடகங்களில் செய்தி வெளியான பிறகு சென்னையை சேர்ந்த காவல்துறையினர் விவசாயிகள் மீது பற்று உள்ளவர்களை போன்று காட்டிக் கொள்வது வேதனையின் உச்சமாக உள்ளதாகவும் தனது வருத்தத்தை பதிவிட்டால் விவசாயிகள் சங்கத் தலைவர் வேலுச்சாமி. 
இந்த சம்பவம் சென்னை மட்டுமல்லாது தமிழக விவசாயிகள் இடையே கடும் கொந்தளிப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது என்பது மட்டும் நிதர்சனம்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: