ஈரோடு 19 ஜூலை,,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஈரோடு மாவட்ட பொதுக்குழு கூட்டம், செல்ல பாட்ஷா வீதியில் உள்ள எம்.ஐ.எஸ் அரங்கில் மாவட்ட தலைவர் எஸ்.ஏ.அஸ்கர் அலி தலைமையில் நடைபெற்றது.
மாநில கௌரவ ஆலோசனை குழு உறுப்பினர் அல்ஹாஜ் ஜி.முஹம்மது தாஜ் மொஹதீன் மாநில வர்த்தகரணி பொதுச் செயலாளர் எம்.நூர் முஹம்மது சேட் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக ஈரோடு மாநகர முன்னாள் தலைவரும் மூத்த மார்க்க அறிஞருமான மௌலானா ஹபீப் முஹம்மது கூட்டத்தை இறை வசனம் ஓதி துவக்கி வைத்தார்.
மாவட்ட செயலாளர் எம்.முஹம்மது ஆரிப் வரவேற்புரை மற்றும் கூட்டத்தின் நோக்கத்தை எடுத்துரைத்தார்.
இந்நிகழ்வில் மாவட்டத் துணைத் தலைவர் அலாவுதீன் சேட் மாவட்ட துணை செயலாளர் பவானி பாசித், முஹம்மது அனிபா, ஜாபர் சாதிக் பிரைமரி நிர்வாகிகள் பவானி சிராஜுதீன் சென்னிமலை நூரே ஆலம் பெருந்துறை சான் பாஷா சத்தியமங்கலம் ஷாஜகான் வி.வி.சி.ஆர் நகர் அபுதாகிர் எஸ்.டி.யூ மாவட்ட தலைவர் ரியாசுதீன், வழக்கறிஞர் முஹமத் ஆசிக் உள்ளிட்டோர் கருத்துரை வழங்கினர்.
கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது :-
1) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பேரியக்கத்திற்கு ஒரு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டதற்கு இக்கூட்டம் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
2) இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் தமிழ்நாடு அரசின் சிறுபான்மை மற்றும் வக்பு வாரிய துறை அமைச்சராக பொறுப்பேற்று சிறப்பாக செயல்பட்டு வரும் மாண்புமிகு ஆடுதுறை ஏ.எம்.ஷாஜகான்,முஸ்லிம் லீக் சட்டமன்ற கட்சி தலைவராக பொறுப்பேற்று செயல்பட்டு வரும் வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு எஸ்.எஸ்.பி.சையத் ஃபாரூக் பாஷா மற்றும் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராக தொடர்ந்து வரும் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் மாண்புமிகு கே.நவாஸ் கனி ஆகியோர்களின் அரசாங்க பணிகள் மற்றும் சமுதாயப் பணிகள் சிறக்க இக்கூட்டம் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறது.
3) தமிழ்நாடு அரசு பொறுப்பேற்றவுடன் பொதுமக்கள்,பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் நலன்களை கருத்தில் கொண்டு முதல் கட்டமாக தமிழ்நாட்டில் 717 டாஸ்மாக் கடைகளை குறிப்பாக ஈரோடு மாவட்டத்தில் 42 டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூடுவதற்கு உத்தரவிட்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களுக்கு இக்கூட்டம் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது.
4) ஈரோடு - பவானி சாலை விரிவாக்க பணிகளை விரைந்து முடித்திட இக்கூட்டம் வலியுறுத்துகிறது
5) ஈரோடு மாநகரின் வளர்ச்சிக்கும், பொதுமக்களின் நீண்டகால எதிர்பார்ப்பாக உள்ள ஈரோடு - சத்தியமங்கலம் சாலை கணிராவுதர் குளம் புதிய பஸ் நிலையம் அமைக்கும் பணியை அரசு விரைந்து துவங்கிட இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
6) ஈரோடு மாநகரில் வசிக்கும் முஸ்லிம்களின் நீண்டகால கோரிக்கையானதும்,அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே வாக்குறுதி அளித்துள்ளதுமான மாநகர எல்லைக்குள் முஸ்லிம்களுக்கான அடக்கஸ்தலம் (கபர்ஸ்தான்) அமைப்பதற்கு அரசு இடம் ஒதுக்கி தந்திட விரைந்து ஆவணம் செய்யுமாறு இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
7) இந்திய விடுதலைப் போராட்ட முன்னோடியும்,உலகம் போற்றும் சமூக நல்லிணக்க நாயகராகவும்,சமூகநீதி காவலராகவும் விளங்கிய மாவீரன் திப்பு சுல்தான் அவர்களுக்கு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் அவரது புகழை போற்றும் வகையில் ஒரு மணிமண்டபம் அமைத்துத் தர இக்கூட்டம் அன்போடு கேட்டுக்கொள்கிறது.
8) ஈரோடு மாவட்டத்தில் இது வரை பட்டா வழங்கபடாத பள்ளிவாசல்கள்,கபர்ஸ்தான்கள்,தர்காக்கள் மற்றும் ஆசூர் கானாக்களுக்கு உடனடியாக வருவாய்த் துறை மூலம் பட்டாக்கள் வழங்கிட இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
9) மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களுடைய ஆட்சி காலத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து சமய வழிபாட்டு தலங்களுக்கும் மின் கட்டணம் என்பது சலுகையின் அடிப்படையில் வழங்கப்பட்டு வந்தது.அதற்கு பின்னால் வந்த அரசாங்கங்கள் அச்சலுகைகளை நிறுத்திவிட்டது. இதன் காரணமாக வருவாய் குறைவாக உள்ள வழிபாட்டு தளங்களில் மின் கட்டணம் செலுத்துவதற்கு அதன் நிர்வாகக் பெருமக்கள் மிகுந்த சிரமப்படுகிறார்கள்.
எனவே தமிழ்நாடு அரசு இதை கனிவோடு பரிசீலனை செய்து அனைத்து சமுதாய மற்றும் சமய வழிபாட்டு தலங்களுக்கும் சலுகை அடிப்படையில் மின் கட்டண திட்டம் கொண்டு வர அரசை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது
10)ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகராட்சிக்கு உட்பட்ட இஸ்லாமியர்கள் கணிசமாக வாழும் அருக அருகே உள்ள வார்டு எண் 12,15,16,21 ஆகியவை பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட வார்டாக உள்ளது.இதனால் ஆண்கள் போட்டியிடுவதற்கு வாய்ப்பில்லாமல் சென்று விடுகிறது எனவே இதை கருத்தில் கொண்டு மேலே குறிப்பிட்டுள்ள வார்டுகளில் இரண்டு வார்டுகளை பொது வார்டுகளாக மறு சீரமைப்பு செய்து தருமாறு இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
இயக்கத் தீர்மானங்கள் :-
11) எதிர்வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரைமரிகளின் பொதுக்குழு கூட்டத்தை மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நடத்துவது என கூட்டம் முடிவு செய்கிறது.
12) எதிர்வரும் உள்ளாட்சி மன்ற தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் போட்டியிடும் தொகுதிகளை உடனடியாக கண்டறிந்து அதன் பட்டியலை எதிர்வரும் ஆகஸ்ட் 30 ஆம் தேதிக்குள் மாவட்ட நிர்வாகத்திடம் அளிப்பது என இக்கூட்டம் முடிவு செய்கிறது.
13) புதிய பிரைமரிகள் அமைப்பதற்கு ஏதுவாக அந்தந்த பகுதிகளில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் நடத்துவது மற்றும் நிர்வாகத்தை முறையாக அமைப்பது என கூட்டம் முடிவு செய்கிறது.
14)சார்பு அணிகளை பலப்படுத்தும் நோக்கில் புதிய உறுப்பினர் சேர்க்கையை நடத்தி அதன் நிர்வாகத்தை விரைவாக அமைப்பது.
15) ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்கள் மற்றும் மஹல்லா ஜமாத் நிர்வாகிகளை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட நிர்வாகிகள் அடங்கிய ஒரு குழு நேரில் சென்று சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து அரசு மற்றும் வக்பு வாரியம் மூலமாக வழங்கப்படும் நல திட்டங்களை அவர்களுக்கு பெற்றுத் தர உதவுவது மேலும் மஹல்லா ஜமாத் கட்டமைப்பை பலப்படுத்துவதற்குண்டான அனைத்து ஆலோசனைகளையும் வழங்குவது எனவும் இக்கூட்டம் முடிவு செய்கிறது.
16)2026 மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி குறித்து சமுதாய மக்களிடத்தில் அதில் கேட்கப்படும் 33 கேள்விகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் அனைத்து குடும்பங்களும் அக்கணக்கெடுப்பில் தவறாமல் பதிவு செய்திடும் பொருட்டும் தொடர்ந்து ஜும்மாக்கள் மற்றும் ஐவேளை தொழுகைகளிலும் தொடர் அறிவிப்பு செய்ய பள்ளிவாசல் முத்தவள்ளிகளையும்,உலமா பெருமக்களையும் இக்கூட்டம் அன்போடு கேட்டுக்கொள்கிறது.
மேலும் ஈரோடு மாநகர எஸ்.டி.யூ அமைப்பாளராக லாயர்ஸ் ஃபோரம் ஏ.அப்துல் சுபான், ஈரோடு வழக்கறிஞர் அணி அமைப்பாளராக அட்வகேட் எம்.முஹமத் ஆசிக் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
மாநில பிரதிநிதி அந்தியூர் ஹாதிம் தாய் மாவட்டத் துணைத் தலைவர் ஹாஜி கே.சாகுல் அமீது சத்தியமங்கலம் ஹாஜி எஸ்.ஏ. ஷான் பாஷா வர்த்தக அணி மாவட்ட தலைவர் அமீனுதீன் செயலாளர் முகமது யாகூப் இளைஞர் அணி துணை அமைப்பாளர் முகமது பாசித் மாணவரணி அமைப்பாளர் நிகால் அகமது, முகமது ஆசிம் ஊடகத்துறை அமைப்பாளர் லுக்மானுள் ஹக்கீம் காயிதே மில்லத் பேரவை அமைப்பாளர் ஆர்.எஸ்.நாசர் அலி பிரைமரி நிர்வாகிகள் பெருந்துறை சான்பாஷா,கலீல், திங்களூர் குல்பிர் பவானி டி.எஸ்.சிராஜுதீன் முன்னா,சையது அக்பர் ஈரோடு முகமது உசேன் ,சிக்கந்தர் வி.வி. சி.ஆர் நகர் அபுதாஹீர் விவேகானந்தா நகர் முஸ்தபா சங்கன் துறை சையது நாசர் காங்கேயம் பாளையம் அலீம், காஜா பாவா,பஷீர் அகமது சத்தியமங்கலம் ஷாஜகான், முனீர் அகமது,நசீப் உசேன் ஷரீஃப் பி.பி.அக்ரஹாரம் முகமது சாலின் சென்னிமலை நூர் ஆலம், பக்ருதீன் அசோகபுரம் உசேன் ஷரீஃப்,முஜீப்தீன்,ஷெரிஃப் சுல்தான்பேட்டை நியமத்துல்லா உள்ளிட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தின் முடிவில் மாவட்ட பொருளாளர் இ.கே.எம். முஹம்மது கலில் நன்றி கூறினார்.



0 coment rios: