புதன், 22 ஜூலை, 2026

கர்நாடகாவிற்கு மின்சாரத்தை நிறுத்துங்கள். காவிரி நீருக்காக தமிழக முதல்வருக்கு விவசாயிகள் சங்கம் அதிரடி வேண்டுகோள்.

சேலம், 
S.K. சுரேஷ்பாபு. 

கர்நாடகாவிற்கு மின்சாரத்தை நிறுத்துங்கள். காவிரி நீருக்காக தமிழக முதல்வருக்கு விவசாயிகள் சங்கம் அதிரடி வேண்டுகோள். 

காவிரி மேலாண்மை கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கர்நாடகா அணைகளில் குடிநீர் தேவைக்காக மட்டுமே தண்ணீர் உள்ளதாகவும், ஆகவே தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க இயலாது என்றும் கர்நாடகா அரசு தெரிவித்தது. எனவே இனிவரும் காலங்களில் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து கர்நாடகா அணைகளுக்கு நீர் வரத்தை இருந்தால் மட்டுமே தமிழகத்திற்கான தண்ணீர் பகிர்வு கொடுக்க முடியும் என காவிரி மேலாண்மை தலைவர் தகவல் தெரிவித்து இருந்தார். மேலும் வரும் கூட்டத்தில் தமிழகத்திற்கான காவிரி தண்ணீர் பகிர்வு தொடர்பாக முடிவு செய்யப்படும் என்றும் குறிப்பிட்டிருந்தார். காவிரி மேலாண்மை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு மற்றும் தகவல் தமிழக விவசாயிகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி டி வி கே தலைமையிலான தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களுக்கு அதிரடி வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார். 
அதில், கர்நாடக அணைகளில் போதிய நீர் இருப்பு இருந்தும், வறட்சி என்று காரணம் கூறி காவிரி நீரை கர்நாடகா அரசு மறுக்கிறது என்றும், தமிழக விவசாயிகளின் நலன் கருதி தமிழகத்தில் இருந்து கர்நாடகாவிற்கு செல்லும் மின்சாரத்தை ஒரு யூனிட் கூட வழங்காமல் நிறுத்துவோம் என தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள் உடனடியாக பதிலடி எச்சரிக்கை விடுத்த வேண்டும் என உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சொன்ன மாநில தலைவர் அதிரடி வேண்டுகோள் ஒன்றினை வெளிப்படுத்தி உள்ளார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: