செவ்வாய், 17 நவம்பர், 2026

பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸிற்கு அன்பளிப்பாக வழங்க வேண்டும் என்று 10 ஏக்கர் காப்பி தோட்டத்தை கேட்டு மிரட்டும் சேலத்தைச் சேர்ந்த முன்னாள் பாமக சட்டமன்ற உறுப்பினர். பாதிக்கப்பட்ட தேயிலைத் தோட்ட உரிமையாளர் உயிர் பாதுகாப்பு கேட்டும், சம்பந்தப்பட்ட மு.கார்த்தி மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க கோரியும் சேலம் மாவட்ட ஆட்சியர் இடத்தில் புகார் மனு.

சேலம், 
S.K. சுரேஷ்பாபு. 

பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸிற்கு அன்பளிப்பாக வழங்க வேண்டும் என்று 10 ஏக்கர் காப்பி தோட்டத்தை கேட்டு மிரட்டும் சேலத்தைச் சேர்ந்த முன்னாள் பாமக சட்டமன்ற உறுப்பினர். பாதிக்கப்பட்ட தேயிலைத் தோட்ட உரிமையாளர் உயிர் பாதுகாப்பு கேட்டும், சம்பந்தப்பட்ட மு.கார்த்தி மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க கோரியும் சேலம் மாவட்ட ஆட்சியர் இடத்தில் புகார் மனு.

சேலம் கொண்டப்ப நாயக்கன்பட்டி சுந்தரம் கார்டன் பகுதியை சேர்ந்தவர் பிரபுவேல். இவருக்கு சொந்தமாக சேலம் மாவட்டம் ஏற்காடு கிளியூர் நீர்வீழ்ச்சி அருகே சுமார் 23 ஏக்கரில் வெல்ஸ் காபி எஸ்டேட் என்ற பெயரில் தேயிலை தோட்டம் உள்ளது. இவர் தனது வழக்கறிஞர்கள் மற்றும் நண்பர்களுடன் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு வழங்குவதற்காக வந்திருந்தார். 
அந்த மனுவில்,  சேலம் மாவட்டம், ஏற்காடு, கிளியூர் பகுதியில், சர்வே எண் 14/1B-இல் 'வெல்ஸ் காபி எஸ்டேட்' என்ற பெயரில் எங்களுக்குச் சொந்தமான காபி தோட்டம் உள்ளது. 2006-ஆம் ஆண்டில், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர் கார்த்தி, எங்களை வற்புறுத்தி, இந்தத் தோட்டத்தில் இருந்த சுமார் 23 ஏக்கர் நிலத்தை அவருக்கு விற்கச் செய்தார். அப்போது அவர் பணம் கொடுத்தாலும், நிலத்திற்கான சரியான விலையை வழங்கவில்லை. அந்த நில விற்பனை முடிந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு, வருமான ஆவணங்கள் மற்றும் பிற தேவைகளுக்காக என்று கூறி, என்னிடமிருந்தும் எனது குடும்பத்தினரிடமிருந்தும் காலி பத்திர ஆவணங்களில் கையொப்பம் பெற்றுக்கொண்டனர். எங்கள் வாழ்வாதாரத்திற்காக நாங்கள் வைத்திருக்கும் 10 ஏக்கர் தோட்டத்தை விற்பனை செய்யவிடாமல், கடந்த 5 ஆண்டுகளாக அவர்கள் பல்வேறு வழிகளில் எங்களுக்குத் தடையை ஏற்படுத்தி வருகின்றனர். அவர்கள் அத்துமீறி நுழைந்து காபி கொட்டைகள் மற்றும் பழங்களைப் பறித்துச் சென்றதுடன், சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான விளைபொருட்களைக் கொள்ளையடித்துள்ளனர். 
மேலும், 20-க்கும் மேற்பட்ட ஆட்களைக் கொண்டு எங்கள் நிலத்தில் வேலி அமைத்தும், கட்டுமானத்திற்குப் பயன்படும் செங்கற்களைக் (hollow bricks) கொட்டியும் நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சித்தனர். இதனைத் தடுப்பதற்காக, சேலம் நீதிமன்றத்தில் O.S.No. 92/2023 என்ற வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் நீதிமன்ற உத்தரவை மீறிச் செயல்பட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கார்த்தி என்பவரின் ஆட்கள், பல்வேறு அலைபேசி எண்களிலிருந்து என்னைத் தொடர்புகொண்டு கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக, ஏற்காடு காவல் நிலையத்திலும், சேலம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் பலமுறை புகார் அளித்துள்ளேன். இருப்பினும், இதுவரை முறையான விசாரணையோ அல்லது நடவடிக்கையோ எடுக்கப்படவில்லை. எங்களால் எங்கள் தோட்டத்தைச் சுதந்திரமாகவும் அமைதியாகவும் பயன்படுத்த முடியவில்லை. தற்போது, ​​எனது குடும்பச் சூழல் காரணமாக, அந்தத் தோட்டத்தில் 4 3/4 ஏக்கர் நிலத்தை ரங்கநாதன் என்பவருக்கு விற்றுள்ளேன்; அவரும் அங்கு பராமரிப்புப் பணிகளைச் செய்யவிடாமல் தடுக்கப்படுகிறார். எனவே, எனது மனுவின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்குமாறும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கார்த்தி மற்றும் அவரது ஆட்கள் எனது தோட்டத்தை ஆக்கிரமிக்காமல் இருப்பதை உறுதி செய்யுமாறும், மேலும் அவர்களிடமிருந்து எனக்குப் பாதுகாப்பு வழங்குமாறும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். 
இது தொடர்பாக ஏற்கனவே நான் அளித்த புகார்களின் நகல்களை இதனுடன் இணைத்துள்ளேன் என்றும் வெல்ஸ் காபி எஸ்டேட் உரிமையாளர் பிரபுவேல் குறிப்பிட்டிருந்தார். 

பாமக தலைவருக்கு அன்பளிப்பாக கொடுப்பதற்காக காபி எஸ்டேட் உரிமையாளரை மிரட்டி 10 ஏக்கர் நிலத்தை கேட்டு மிரட்டும் பாமக முன்னால் சட்டமன்ற உறுப்பினர் சேலத்தைச் சேர்ந்த மு.கார்த்தி இப்படியானவராய் என்று நிலத்தை பாதுகாக்கவும் உயிர் பாதுகாப்பு கேட்டும் பாதிக்கப்பட்டுள்ள தேயிலைத் தோட்ட உரிமையாளர் உட்பட அனைத்து கட்சி பிரமுகர்கள் இடையே முகச்சுளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட தேயிலைத் தோட்ட உரிமையாளரின் கோரிக்கையை நிறைவேற்றுவாரா ? , பொறுத்திருந்து பார்ப்போம்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: