சேலம்,
S.K.சுரேஷ்பாபு.
சேலம் கெங்கவள்ளியில் தனது மகளின் கணவர் செல்வகுமார் என்பவரால் எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் உயிருக்கு ஆபத்து, ஆசிட் வீச்சு மற்றும் கொலை மிரட்டல் விடுக்கப்படுவது குறித்தும் எதிரி மீது உடனடியாகப் புதிய வழக்குப்பதிவு செய்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட தாய் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் புகார்.
சேலம் மாவட்டம் கெங்கவல்லி கூட மழையைச் சேர்ந்தவர்கள் பெரியசாமி சுதா தம்பதியினர். இவர்களுக்கு 17 வயதில் வைதீஸ்வரி என்ற பெண் உள்ளார். இவர் புகார் மனு ஒன்றினை வழங்குவதற்காக அமித் ஷா இளைஞர் படை அமைப்பை சேர்ந்த மாநில துணைத்தலைவர் டாக்டர் செந்தில்குமார் என்பவருடன் வந்திருந்தார். அந்த புகார் மனுவில், மகள் இளம் வயது பெண் என்பதால் அரசால் அங்கீகரிக்கப்பட்ட வயதிற்கு குறைவாக திருமணம் செய்தவர் என்பதாலும், தாய் சுதா என்பவர் பாதிக்கப்பட்ட தனது மகளின் பெயரில் நீதி வழங்க கோரி வழங்கிய அந்த புகார் மனுவில்,
கடந்த 05.02.2025 அன்று எனது பெற்றோர்கள் எனக்குக் குழந்தைத் திருமணம் செய்துவைத்தார்கள். இத்திருமணம் முடிந்த மறுகணமே 1098 HELP LINE அவசர உதவி எண்ணிற்கு நான் நேரடியாகப் புகார் தெரிவித்தேன். அதனடிப்படையில் ஆத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் அவர்கள் குற்ற எண்: FIR எண். 77/2025 என வழக்குப்பதிவு செய்து, தற்போது இவ்வழக்கு சேலம் மாவட்ட சிறப்பு போக்சோ / குழந்தைகள் நீதிமன்றத்தில் SPLSC எண்.20/2026 என்ற எண்ணில் விசாரணை உள்ளது. இந்நிலையில், இவ்வழக்கின் முக்கிய எதிரியான மணமகன் செல்வகுமார் என்பவர், என்னை நீதிமன்ற சாட்சியத்தை மாற்றுமாறும், வழக்கைத் திரும்பப் பெறுமாறும் தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றார்.
நான் இதற்குச் சம்மதிக்காததால், "வழக்கை திரும்பப் பெறாவிட்டால் உன்னைக் கழுத்தை அறுத்துக் கொன்று விடுவேன்; முகத்தில் ஆசிட் அடித்து உருக்குலைத்து விடுவேன் என்று பலமுறை நேரிலும், தொலைபேசி வாயிலாகவும் மிகக் கொடூரமாகக் கொலை மிரட்டல் விடுத்து வருகிறார். மேலும், எதிரி செல்வகுமார் தனது வாட்ஸ்அப் (WhatsApp) எண்ணில் என்னைப் பற்றியும், எனது தாயாரைப் பற்றியும் அவதூறான, ஆபாசமான வார்த்தைகளைப் பயன்படுத்தி, புகைப்படங்களைத் தவறாக சித்தரித்து தொடர்ந்து ஸ்டேட்டஸ் (நிலை) வைத்து, எங்கள் பெரும் அவமானத்தையும் கடுமையான மன உளைச்சலையும் ஆளாக்கி வருகிறார். இது குறித்து நான் ஆத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு (AWPS) நேரில் சென்று புகார் தெரிவிக்க முயன்றபோது, அங்குள்ள காவல் துறையினர் எனது புகாரைப் பெறுவதற்கு முற்றிலும் மறுத்துவிட்டனர். உள்ளூர் காவல் நிலையத்தில் எங்களுக்கு எந்த பாதுகாப்பும் கிடைக்கவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது எதிரியால் எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் மிகக் கடுமையான உயிராபத்தும், அச்சுறுத்தலும் தொடர்ந்து நீடித்து வருகிறது. எனவே, சிறப்பு நீதிமன்ற அரசு வழக்கறிஞர் (பொது வழக்குரைஞர்) அவர்களின் சட்டபூர்வ வழிகாட்டுதலின்படி, உள்ளூர் காவல் நிலையத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாவிட்டாலும், தங்களின் நேரடித் தலையீட்டின் மூலம் உடனடி நீதி மற்றும் பாதுகாப்பு வேண்டி இந்த அவசரப் புதிய புகாரைச் சமர்ப்பிக்கிறேன் என்றும் பாதிக்கப்பட்டுள்ள பெண்ணின் தாய் தனது கோரிக்கையை மனதில் குறிப்பிட்டிருந்தார்.



0 coment rios: